districts

img

தொட்டபெட்டா மலைச்சிகரம் திறப்பு எப்போது

உதகை, நவ.25 - உதகை தொட்டபெட்டா சுற்றுலாத் தலத்தை சுற்றுலாப் பயணிகள் பார் வையிட அனுமதியளிக்க மாவட்ட நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டுமென அப்பகுதியில் தொழில் செய்து வருபவர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

நீலகிரி மாவட்டம், உதகையில் உலக பிரசித்தி பெற்ற தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளது. இதனைக் காண உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் ஆண்டு முழுவதும் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தொட்டபெட்டா மலைசிகரத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனு மதி மறுக்கப்பட்டு வருகிறது.

தற் போது மாநில அரசு ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு தோட்டக் கலைத் துறையின் கீழ் செயல்படும் பூங்காக்கள் மட்டும் செயல்பட அனு மதியளித்துள்ளது. தொட்டபெட்டா மலைச்சிகரம், படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் ஆகியவை திறக்கப்படாமல் உள்ளது. இதனை அறி யாமல் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து திரும்பி செல்கின்றனர்.  

இதற்கிடையே, சுற்றுலாவை நம்பி தொழில் செய்து வரும்  ஜீப் ஓட்டுநர் கள், சுற்றுலா டாக்சி ஓட்டுநர்கள் வேலை யிழந்து, வருவாய் இழந்து பெரும் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். எனவே, தொட்டபெட்டா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை மாவட்ட நிர்வாகம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா வாசி களும், அப்பகுதியில் தொழில் செய்து வருபவர்களும் கோரிக்கை விடுத்துள் ளனர்.

;