நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்தொரையில் செவ்வாயன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட ரூ. 2.70 லட்சம் மதிப்பீட்டிலான ஹாலோபிளாக் கல் தயாரிக்கும் இயந்தி ரத்தை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.