districts

img

உதகை : தேயிலை பூங்காவில் மலர் நாற்று உற்பத்தி தீவிரம்

உதகை, நவ. 29- நீலகிரி மாவட்டம், உதகையில் முதல் சீசனுக்காக தொட்டபெட்டா தேயிலை பூங்காவில் நாற்று உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுற்றுலா நகரமான உதகையில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் ஏராளமான பூங்காக்கள் உள்ளன. இதில், தொட்டபெட்டாவில் உள்ள தேயிலை பூங்காவும் ஒன்று. இங்கு தேயிலை தோட்டங்கள், அழகிய புல் மைதா னங்கள், குழந்தைகள் விளையாடும் விளையாட்டு உபக ரணங்கள் ஆகியவை உள்ளன. இதனை காண நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்ற னர். ஆண்டுதோறும் கோடை சீசனுக்கான இந்த பூங்கா வும் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல் சீசனுக்கான தற்போது இப்பூங்காவையும் தோட்டக் கலைத்துறையினர் தயார் செய்து வருகின்றனர். நடவு பணிகள் இன்னும் துவங்கப்படாத நிலையில், தற்போது நாற்று உற்பத்தி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேயிலை பூங்காவில் உள்ள பாத்திகளில் பல் வேறு நாற்று உற்பத்தியில் பணியாளர்கள் ஈடுபட்டு வரு கின்றனர். மலர் நாற்றுகள் உற்பத்தியானவுடன், முதல் சீச னுக்கான நடவு பணிகள் விரைவில் துவங்கப்படும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.