districts

img

சிபிஎம் போராட்ட அறிவிப்பு எதிரொலி: 108 ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் துவக்கம்

நாமக்கல், நவ.28- மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்ட அறி விப்பால் எலச்சிபாளையத்தில், 108 ஆம்பு லன்ஸ் சேவை மீண்டும் துவக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் பகுதியில் கடந்த 10 வருடங்களாக இயங்கி வந்த 108 ஆம்பு லன்ஸ் சேவை ஒரு வருடத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் அவசர தேவைகளுக்கு ஆம்புலன்சை பயன் படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் சார் பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.  இத னைத்தொடர்ந்து போராட்டத்திற்கு முன்ன தாகவே சுகாதாரத் துறை நிர்வாகம், 108 ஆம் புலன்ஸ் வாகனத்தை உறுதிப்படுத்தி அப் பகுதிக்கு நிரந்தரமாக சேவை செய்ய வாக னத்தை பயன்படுத்த அனுப்பி வைத்தனர். இதையடுத்து அப்பகுதி பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கட்சியினரும் திரண்டு வந்து எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அரு கில் ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவேற்று பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.