districts

img

பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேலை கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜுன் 3-
குழந்தைகள் உட்பட பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் அரசைக் கண்டித்தும், உட னடியாக போர் நிறுத்தம் கோரியும் இடதுசாரி கட்சிகள் சார்பில் ஜுன் 3 திங்களன்று நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இனப்படுகொலைப் போரில் ஈடுபட்டுள்ளது இஸ்ரேலின் நேதன் யாகு அரசு. மருத்துவமனைகள், அக திகள் முகாம்கள் என நடத்தப்படும் குண்டு வீச்சில் பச்சிளம் குழந்தை கள் உட்பட 65 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் கொன்று குவிக்கப்பட்டு ள்ளனர். கொலை நடுக்கம் ஏற்படும் இந்த கொடிய தாக்குதலுக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டனமும், பாலஸ்தீனத்துக்கு ஒருமைப்பாடும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மோடி அரசு இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்பி படுகொலை களுக்கு துணை போகிறது. இதற்கு எதிராக இந்தியா முழுவதும் இடசாரி கட்சிகள் ஞாயிறன்று (ஜுன் 2) பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தின.

அதன் ஒரு பகுதியாக திங்க ளன்று நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இடதுசாரி கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.செல்ல சுவாமி தலைமை வகித்தார். மூத்த தலைவர் என்.முருகேசன், சிபிஐ மாவட்டச் செயலாளர் சுபாஷ் சந்திர போஸ், சிபிஐ (எம்எல்) நகர செயலா ளர் ஜஸ்டின் சுந்தர், சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினர் ஆர்.லீமா றோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.அகமது உசேன் ஆகியோர் பேசினர். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினரகள் என்.எஸ்.கண்ணன், எஸ்.ஆர்.சேகர், எஸ்.சி.ஸ்டாலின்தாஸ், உஷா பாசி, என்.ரெஜீஸ்குமார், எஸ்.அந் தோணி, மாநகர பொறுப்பு செய லாளர் த.மனோகர ஜஸ்டஸ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

;