districts

img

பண்பாட்டுத் தளத்தில் எழுத்தாளர்களின் படைப்புகளால் புரட்சி நடக்கிறது எல்.பி.சாமி நினைவேந்தல் நிகழ்வில் ஜி.ராமகிருஷ்ணன் கருத்து

நாகப்பட்டினம், ஏப்.25 -  நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூ ரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நாகை மாவட்ட குழுவின் சார்பில் கவிஞர் எல்.பி.சாமி படத்திறப்பு மற்றும் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் எல்.பி.சாமியின் உரு வப்படத்தை திறந்து வைத்து நினை வஞ்சலி உரையாற்றினார். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வே ளூரில் மறைந்த கவிஞர் எல்.பி.சாமி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு தமுஎகச நாகை மாவட்ட குழு சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு நாகை மாவட்ட தலைவர் கவிஞர் ஆவ ராணி ஆனந்தன் தலைமை வகித்தார்.  மாநில குழு உறுப்பினர் நா.சத்திய சீலன் வரவேற்றார். மாவட்ட குழு உறுப்பினர் தா.பாலஇரணியன் எல்.பி.சாமி பற்றிய வாழ்க்கை குறிப்பு வாசித் தார்.  எல்.பி.சாமி கடைசியாக எழுதிய  “அமெரிக்காவை கடவுள் காப்பாற்றட் டும்” என்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு கவிதை  நூலை தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன் வெளியிட  எல்.பி.சாமியின் துணைவியார் எல்.பி.வசந்தி பெற்றுக் கொண்டார்.

எல்.பி.சாமியின் உருவப்படத்தை திறந்து வைத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், பிற மாநிலங்களுக்கு செல்லாமலேயே 13 மொழிகளை கற்றறிந்தவர் எல்.பி.சாமி. கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கதைசொல்லி, ஆசிரியர், சித்த மருத்துவர் இப்படி பன்முக தன்மை கொண்டவர். ஆழிப்பேரலையின் போது கடலோர கிராமங்களில் மக்களோடு  மக்களாக இருந்து களமாடியவர்.  அவரோடு நானும் பயணித்திருக்கிறேன். பல மொழிகளை கற்றுக் கொண்டு அதை தன்னுடைய வளர்ச்சிக்காக பயன் படுத்திக் கொள்ளாமல், எளிய மக்க ளின் வளர்ச்சிக்காக அம்மொழிகளி லிருந்து படைப்புகளை தந்தவர். இந்த மண்ணுக்கு ஏற்றவாறு பேசியவர்-எழுதியவர். படைப்பாளர்கள் தங்களு டைய சிந்தனை விதையை இசை, ஓவி யம், சிறுகதை, கவிதை, நாவல், நாடகம்  என இப்படி மக்களின் விடுதலைக்காக தங்களுடைய உணர்வு நிலைகளை பிரதிபலிக்கிறார்கள். பண்பாட்டுத் தளத் தில் படைப்பாளர்கள் இயங்குவதன் மூலம் புரட்சி வெடிக்கிறது. மனிதனாகப் பிறந்தவன் வாழ்க்கை யில் பல நூல்களை வாசித்து இருக்க வேண்டும். அதிலும் இடதுசாரி இயக்கத்தில் பங்கு கொள்ளும் தோழர் கள், எண்ணற்ற நூல்களை கற்றறிந் திருக்க  வேண்டும் என எல்.பி.சாமி  பற்றிய நினைவலைகளை குறிப்பிட்டார்.

சிபிஎம் சட்டமன்றக் குழு தலை வரும் எல்.பி.சாமியுடன் இணைந்து பணி யாற்றியவருமான வி.பி.நாகைமாலி நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.  சிபிஎம் நாகை மாவட்ட செயலாளர்  வி.மாரிமுத்து, தமுஎகச மாநில துணை  பொதுச்செயலாளர் களப்பிரன், வி.தொ.ச மாநில பொதுச் செயலாளர் வி. அமிர்தலிங்கம், தீக்கதிர் நாளேட்டின் மதுரை பொது மேலாளர் ஜோ.ராஜ் மோகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி  மாவட்ட செயலாளர் ப.சுபாஷ் சந்திர போஸ், தமுஎகச மாவட்ட குழு உறுப்பி னர் ஆர்.நடராசன், சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் பி.செல்வராஜ் ஆகி யோர் அஞ்சலி உரையாற்றினர். நிகழ்ச்சிகளை தமுஎகச மாவட்ட செயலாளர் ஆதி.உதயக்குமார் ஒருங்கி ணைத்தார். தமுஎகச மாவட்ட பொருளா ளர் க.ரமேஷ் நன்றி உரையாற்றினார். “அப்பாவைப் பற்றி” என்ற தலைப்பில் எல்.பி.சாமியின் நினைவலைகளை, அவரது இளைய மகனும் வடசென்னை  வாலிபர் சங்க மாவட்ட செயலாளரு மான சரவணதமிழன் பகிர்ந்து கொண் டார்.