கனமழை காரணமாக தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பலத்த மழை காரணமாக தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயில் பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. எனவே ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, வண்டி எண் 06667 தூத்துக்குடி - திருநெல்வேலி சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
தூத்துக்குடியிலிருந்து மாலை 05.15 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 16235 தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் காலதாமதமாக இன்று இரவு 09.15 மணிக்கு புறப்படும்படி நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல,
தூத்துக்குடியிலிருந்து இரவு 0815 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 12694 தூத்துக்குடி சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் 4 மணி நேரம் காலதாமதமாக இன்று (நவம்பர் 25/26) நடு இரவு 12.15 மணிக்கு புறப்படும்படி நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.