districts

img

தென் மண்டல பெண்கள் கோகோ போட்டியில்

திருவாரூர், டிச.31-  திருவாரூர் மாவட்டம் நீலக்குடி யில் அமைந்துள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற 2023-24 தென் மண்டல பெண்களுக்கான கோகோ போட்டிகள் நிறைவு பெற்றன.

டிச.26 அன்று துவங்கிய தென் மண்டல பெண்களுக்கான கோகோ  போட்டிகள் டிச.30 இல் நிறைவு பெற்றது.  இதில் 62 பல்கலைக்கழகத்தில் இருந்து  சுமார் 930 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

ஐந்து நாள் நடைபெற்ற இந்த போட்டிகளில், கர்நாடகத்தைச் சேர்ந்த மைசூர் பல்கலைக்கழகம், கேரளா வைச் சேர்ந்த கோழிக்கோடு பல்கலைக் கழகம், அதனைத் தொடர்ந்து தமிழ் நாட்டைச் சேர்ந்த பாரதியார் பல்கலைக் கழகம் என நான்கு அணிகளும் லீக் சுற்றுக்கு தேர்ச்சி பெற்றன.

இதில் மதிப்பெண் அடிப்படையில் கர்நாடகத்தைச் சேர்ந்த மைசூர் பல்க லைக்கழகம் முதலிடம் பெற்றது. கோழிக் கோடு பல்கலைக்கழகம் 2 ஆம் இடத்தை வென்றது. லீக் சுற்றில் முன் னேறிய நான்கு அணிகளும், அனைத் திந்திய மகளிர் கோகோ போட்டிகளில் விளையாட தேர்ச்சி பெற்றுள்ளனர்.

விழாவிற்கு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மு.கிருஷ்ணன், அனைத்திந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பின் கண் காணிப்பாளர் பேராசிரியர் மகாதே வன், தமிழ்நாடு மத்திய பல்கலை. பதி வாளர் இரா.திருமுருகன் மற்றும் தேர்வு  கட்டுப்பாட்டாளர் சுலோச்சனா சேகர், உடற்கல்வி மற்றும் விளையாட்டுத் துறை தலைவரும், தென் மண்டல பெண்களுக்கான கோ கோ போட்டியின் ஒருங்கிணைப்பாளருமான பேரா.டி.மணி  அழகு ஆகியோர் முன்னிலை வகித்த னர்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மு.கிருஷ்ணன், அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி.ரவி மற்றும் தமிழ்நாடு உடற் கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் ஆர்.திருமலைச்சாமி ஆகியோர் கேட யங்கள் மற்றும் சான்றிதழை வழங்கி னர்.

ஐந்து நாள் நடைபெற்ற இந்த போட்டிகளில், மூன்று நாள் வெளி மைதானத்திலும், கடைசி 2 நாள் லீக்  சுற்றுகள் பிரத்யேகமாக அமைக்கப் பட்ட உள்ளரங்கிலும் நடைபெற்றன. 

தென்மண்டல கோகோ போட்டிகள்  உள்ளரங்கில் நடப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.