districts

img

திருவாரூரில் புத்தகத் திருவிழா மாா்ச் 25- இல் தொடங்குகிறது

திருவாரூர், மார்ச் 12- திருவாரூர் மாவட்டத்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் புத்தகத் திருவிழா நடைபெறவிருந்த நிலையில், தொடர் மழையால் தடைபட்டது. இந்நிலையில், மார்ச் 25- ஆம் தேதி தொடங்கி ஏப்.2-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம்  ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ப. சிதம்பரம் முன்னிலை வகித்தார். இதில், சேவை சங்கங்கள், தமிழ் அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள், பொதுநல அமைப்புகள், அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்று தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தினர். கூட்டத்தில் ஆட்சியர் பேசியது: தமிழக அரசு, வாசிப்புத்திறனை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  அந்த வகையில், மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில், மார்ச் 25-ஆம் தேதி முதல் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடத்தப்படவுள்ளது. இந்த விழா சிறப்பாக நடைபெற, உங்களைச் சார்ந்த குடும்பங்கள், நண்பர்க ள் அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும். இதுகுறித்த புரிதல் மற்றும் விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உங்கள் ஒவ்வொருக்கும் பங்கு உள்ளது. பள்ளி மாணவர்களிடையே வாசிப்புத்திறனை மேம்படுத்தும் ஒன்றாக இந்த புத்தகத் திருவிழா அமையும். அரசு பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்த புத்தக திரு விழாவில் உள்ளூர் கலைஞர்கள், புத்தக வெளியீட்டாளர்கள், சொற் பொழிவாளர்கள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும். எதிர்கால சந்ததிகளிலிருந்து புதிய ஆளுமைகளை உருவாக்கும் நாற்றங்காலாக புத்தகத் திருவிழா அமைவதற்கு, அனைத்துத் துறை அலுவலர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார். முன்னதாக, புத்தகத் திருவிழா இலச்சினையை அவர் வெளியிட்டார். நிகழ்வில், கோட்டாட்சியர் சங்கீதா, பொதுநல அமைப்பினர், தமிழ்  அமைப்பினர் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.

;