திருவாரூர், ஜூலை 12 - உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அலுவ லர்கள், செவிலியர் கல்லூரி மாணவர்கள் இணைந்து உலக மக்கள் தொகை தின உறுதிமொழியினை எடுத்துக் கொண்ட னர். அதனைதொடர்ந்து உலக மக்கள் தொகை தினம் 2022-ஐ முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், நற்சான்றிதழ்களை யும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். பின்னர், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி செவிலியர் மாணவிகள் சுமார் 50 பேர் பங்கேற்ற உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.