districts

10, 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் வேலைவாய்ப்பு தளத்தில் பதிவு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவாரூர், செப்.14 - 2021 - 2022 ஆம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 ஆம்  வகுப்பு முடித்த மாணவர் களுக்கு அவரவர் பயின்ற  பள்ளிகளில் அசல் மதிப் பெண் சான்றிதழ் செப்டம்பர் 15 (வியாழன்) முதல் வழங் கப்பட உள்ளது.  கடந்த சில ஆண்டுகளாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு  தேர்ச்சி பெற்ற மாணவர்க ளின் மதிப்பெண் சான்றி தழ்களை நிகழ்நிலையாக வேலைவாய்ப்பு இணைய தளத்தில் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்த நடைமுறை  தற்போது நிறுத்தப்பட்டுள் ளது. இம்முறை மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை தரும் மாண வர்களுக்கு பதிவுகள் மேற் கொள்ளப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது. மேலும், வேலை வாய்ப்பு இணையதளமான www.tnvelaivaaippu.gov.in -ல் பதிவுகள் மேற்கொள் ளும் வசதி உள்ளதால், அதில் நேரடியாக மாண வர்கள் பதிவு செய்து கொள் ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே 10  ஆம் வகுப்பு பதிவு செய்த  மாணவர்கள் 12 ஆம் வகுப் பினை கூடுதல் பதிவாகவும், பதிவு செய்யாதவர்கள் புதிய பதிவையும் “இ-சேவை” மையங்கள் வாயி லாக பதிவு செய்து கொள்வ தற்கான வசதி செய்யப்பட் டுள்ளது.  இதே நடைமுறையை பின்பற்றி 10 ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றி தழை பெற்ற பின்பு மாண வர்கள் பதிவு செய்து கொள் ளலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள் ளார்.