districts

img

வாழவந்தான் கோட்டையில் சுடுகாடு கேட்டு போராட்டம்

திருவள்ளூர், செப் 26- வாழ்ந்தான் கோட்டையில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு இலவச குடிமனை  பட்டா வழங்கவில்லை என்றால் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவல கத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் எச்சரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக் கோட்டையை அடுத்த கச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாழவந்தான் கோட்டையில் இருளர் இன மக்கள் வசிக்கின்றனர். இந்த குடியிருப்புகளை சுற்றி எழுப்பப்பட்டிருந்த தீண்டாமை சுவர் அண்மையில் பலகட்ட போராட்டத்திற்கு பின்னர் இடித்து தள்ளப் பட்டது. இந்த நிலையில்  ஞாயிறன்று     (செப் 25) வாழ்ந்தான் கோட்டையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கொடியேற்றுதல் மற்றும் தகவல் பலகை திறப்பு விழா கிளை தலைவர் ரவணையா தலைமையில் நடைபெற்றது. அப்போது வாழ்ந்தான் கோட்டையில் வசிக்கும் மக்கள் தங்கள் குடும்பங்களுக்கு இலவச குடிமனை பட்டா வழங்க வேண்டும், சுடுகாடு  மற்றும் சுடுகாடுப் பாதையை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளாட்சி அமைப்பில் வாழ்ந்தான் கோட்டையை பழங்குடி இன மக்களுக்குகான (எஸ்.டி) வார்டாக  ஒதுக்க வேண்டும் போன்ற  கோரிக்கை களை வலியுறுத்தப்பட்டது. பின்னர் இந்த கூட்டத்தில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு பேசுகையில், குடிமனை பட்டா கேட்டு பல கட்ட போராட்டங்கள் நடத்திய பிறகு ஒரு பகுதியினருக்கு மட்டும் இலவச பட்டாக்களை வழங்கியுள்ளனர்.மீதமுள்ள 19 குடும்பங்களுக்கு இன்னும்  பட்டாக்கள் வழங்கவில்லை.

மற்றும் சுடுகாடு கேட்டு,  நீண்ட காலமாக போராடி வருகிறோம்,  இந்த கோரிக்கைகளை அடுத்த 15 நாட்க ளுக்குள்  நிறைவேற்றவில்லை என்றால், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவல கத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தார். இதில் தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின்  மாநில பொதுச் செயலாளர்  ஜி.கங்காதரன்,  மாநில குழு உறுப்பினர் ஜி.விஜியா கொடியேற்றினார்.பூண்டி ஒன்றிய செயலாளர் கே.முருகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் டில்லி,  அற்புதம், வழக்கறிஞர் சுதாகர், கிளை செயலாளர் செல்லம்மா, பொருளாளர் கணேசன், சிபிஎம் கிளை செயலாளர்கள் ஆர்.முரளி  (சீத்தஞ்சேரி), எஸ்.நல்லரசு (தேவேந்த வாக்கம்), ஆகியோர் பேசினர்.

;