districts

img

பழங்குடியின தொழிலாளி கொலையை மறைக்கும் காவல்துறை: உறவினர்கள் ஆவேசம்!

திருவண்ணாமலை,செப்.19- சாத்தனூர் அணை அருகே பழங்குடியின தொழி லாளி அடித்து கொலை செய்யப்பட்டும் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையை கண்டித்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் உறவி னர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் ஊராட்சியில் உள்ளது கடப்பன் குட்டை. இங்கு பழங்குடியினத்தை சேர்ந்த 15  இருளர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றது. இதில் ராமன் மகன் பழனி செப். 15 அன்று வீட்டின் அருகில் தென்பெண்ணை ஆற்றங் கரையில் நின்றுக் கொண்டிருந்தி ருக்கிறார். அப்போது அங்கு வந்த மீன்வளத்துறை அதிகாரி சித்ரா, சாத்தனூர் அணை மீன்பிடி உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் கார்த்தி, திவாகர் உள்ளிட்ட 10 பேரும், திருட்டுத்தனமான மீன் பிடிக்க வந்தாகக் கூறி பழனி யிடம் தகராறு செய்து தாக்கிய தாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் குடும்பத்தையே கொலை செய்து விடுவோம் என மிட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், மருத்துவமனைக்கும் செல்லாமல் தனது வீட்டிலேயே, சிகிச்சை எடுத்து வந்த பழனி, ஞாயிறன்று (செப்.18) உயிரி ழந்துள் ளார். பழனியின் உடல் முழுவதும் காயங்கள் உள்ளது. காது, மூக்கில் ரத்தம் கசிந்து உள்ளதை காணமுடிகிறது. இதுகுறித்து தகவலறிந்து,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நிர்வாகிகள் பழனியின் வீட்டிற்கு சென்றனர். பழனியின் மகன் தேவேந்திரனை சந்தித்து ஆறுதல் கூறினர். பிறகு, சாத்தனூர் அணை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

தந்தையை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்த னர். இதையடுத்து பழனி யின் சடலத்தை மீட்ட காவல்துறை யினர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரி சோதனைக்காக அனுப்பி  வைத்த னர். பின்னர் திங்களன்று (செப்.19) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஒன்று திரண்ட பழனியின் உறவினர்கள், கொலை வழக்காக பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தால் தான், பழனியின் சட லத்தை வாங்குவோம் என்று திரு வண்ணாமலை அரசு மருத்துவ மனையின் பிணவறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சியின் மாவட்டச் செய லாளர் எம். சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ப. செல்வன், இரா. பாரி, எஸ். ராம தாஸ், ஏ. லட்சுமணன், சிஐ டியு நிர்வாகிகள் நாகராஜ், காங்கேயன், தண்டராம்பட்டு வட்டார செயலாளர் அண்ணா மலை உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த செங்கம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் மற்றும் காவலர்கள் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். பிறகு, போராட்டத்தை தற்காலிகமாக விலக்கி கொண்டனர்.  பேச்சுவார்த்தையில் காவல் துறையினர் உறுதியளித்தப்படி, கொலை வழக்கு பதிவு செய்ய வில்லை என்றால் செவ்வாயன்று (செப்.20) பழனியின் சொந்த ஊரான கடப்பங்குட்டையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். உயிரிழந்த பழனியின் தந்தை ராமன் மற்றும் அவரது உறவினர் நிலங்களை அந்தப் பகுதியிலுள்ள ஆதிக்க சக்திகளை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

அந்த ஆக்கிரமிப்பை அகற்றி உரியவர்களிடம் நிலத்தை ஒப்படைக்கக் கோரி கடந்த காலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தது. ராமன் உள்ளிட்ட பழங்குடி யினரின் நிலங்களை அபகரித்து வைத்திருந்த நபர்களுக்கு வேண்டப்பட்டவர்களே, சாத்த னூர் அணை மீன்பிடி உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர்களாக உள்ள னர்.  அந்த முன் விரோதம் காரண மாகவே பழனியை அடித்து கொலை செய்துள்ளதாகவும், ராமனின் மற்றொரு மகன் கோவிந்த ராஜ் இதற்கு முன்பு மர்ம மான முறையில் உயிரிழந்துள்ள தாகவும்,  பழனியின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

;