districts

img

வீடு இல்லாமல் அல்லப்படும் இஸ்லாமிய குடும்பங்கள்: முதல்வருக்கு சிபிஎம் கோரிக்கை

திருவண்ணாமலை,செப்.10- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாலையிட்டாங்குப்பம் பகுதியில் இஸ்லாமிய மக்கள் வசிக்கும் வீடு களுக்கு பட்டா வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், காரம் ஊராட்சி மதுரா மாலையிட்டன்  குப்பம் கிராமத்தில் பாய் நெசவு, கோரை சாயம் போடுதல் மற்றும் கூலி வேலைகளில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய குடும்  பத்தினர் பல்லாண்டு கால மாக வீடு இல்லாமல் தவித்து வந்தனர். கூலி தொழி லில் ஈடுபட்டு வந்த இஸ்லாமிய குடும்பங்க ளுக்கு ஊருக்கு வெளியே, தீர்வு ஏற்படுத்தாத தரிசு நிலத்தில் வீடுகள் கட்டிக்கொள்ள ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில், அந்த இடத்திற்கு முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் நகர் என்று பெயரிட்ட னர். சுமார் 35 இஸ்லாமிய குடும்பத்தினர் குடிசை வீடு கட்டினர். அதற்கு வீட்டுவரியும் செலுத்தி னர். அந்த இடத்தில் வசிப்ப தற்கான ஆதார் அட்டை, ரேசன் அட்டைகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில், இஸ்லாமிய மக்கள் வசித்தும் வரும் பகுதி ஆக்கிரமிப்பு என்றும் குடிசைகளை காலி செய்ய வேண்டும் என்றும் வந்தவாசி வட்டாட்சியர் நோட்டீஸ் வழங்கினார். இதனையடுத்து, கடந்த மாதம் 29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரை சந்தித்த இஸ்லாமிய குடும்பங்கள் கோரிக்கை மனு அளித்தன. இந்நிலையில், வெள்ளி யின்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம்.பிரகல நாதன், எஸ்.ராமதாஸ், வந்த வாசி வட்டார செயலாளர் அப்துல்காதர் ஆகியோர் மலையிட்டான் குப்பம் பகுதிக்கு சென்று பார்வை யிட்டனர்.

பிறகு, அங்கு வசிக்கும் மக்களிடம் விசா ரணை நடத்தினர். அப்போது, வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் தங்கள் நிரந்தரமாக வசிப்ப தற்கு நிலமும் வீட்டு மனைப் பட்டாவும் பெற்றுத்தர வேண்டும் என்று சிறுபான்மையின பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார்,“ தமிழகத்தில் வசிக்க வீடு இல்லாத குடும்பங்கள் எதுவும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த, தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். ஆனால், மாலையிட்டான் குப்பம் பகுதியில் வசிக்கும் 35 இஸ்லாமிய குடும்பங்களும் வசிப்பதற்கு வேறு இடம் இல்லை.  ஊராட்சி மன்றத் தீர்மானத்தையும் எற்காமல் வந்தவாசி வட்டாட்சியர் உதாசீனப்படுத்தி வரு கிறார். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அந்த மக்க ளுக்கு பட்டா வழங்க வேண்டும்” என்றார்.

;