districts

ஐம்பொன் சிலைகள் கடத்தல்

திருவண்ணாமலை, அக்.6- திருவண்ணாமலை அடுத்த நூக்கம்பாடி அருகே வாணாபுரம் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது விலை உயர்ந்த 7 ஐம்பொன் சிலைகள் இருந்தது. பின்னர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசா ரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தானிப்பாடி அருகே உள்ள ஒரு கோவிலில் 10 ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது. அதே போல், தானிப்பாடி அருகில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிலைகள் திருட்டு போனது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

;