திருப்பூர், பிப். 26 -
14 ஆவது ஊதிய உயர்வு ஒப்பந் தத்தை உடனடியாக ஏற்படுத்தக் கோரி இரண்டாவது நாளாக வெள்ளியன்று அரசு போக்கு வரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 14ஆவது ஊதிய உயர்வு ஒப்பந் தத்தை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும். ஓய்வுபெறும் போக்கு வரத்து ஊழியர்களுக்கு உடன டியாக ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து பணப்பயன்களையும் வழங்கிட வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து போக்கு வரத்து ஊழியர் சங்கங்கள் தலைமை யில் வியாழக்கிழமை முதல் போக்கு வரத்துத் தொழிலாளர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்ற னர். முதல்நாள் வேலைநிறுத்தம் மகத்தான வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது நாளான வெள்ளிக் கிழமை போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் கோரிக்கைகளை வலியு றுத்தி கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். திருப்பூர் காங்கேயம் கிராஸ் சாலை அரசுப் பேருந்து பணிமனை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் சிஐடியு மண்டலப் பொதுச் செய லாளர் செல்லதுரை, என்.சுப்பிர மணியம், ஏஐடியுசி சார்பில் குமரே சன், சுந்தரேசன், எல்பிஎப் சார்பில் பழனிசாமி, மோகனசுந்தரம், ஏஐஎல்எல்எப் சார்பில் துரைசாமி, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ராஜேந்திரன், பாலசுப்பி ரமணியம் ஆகியோர் கோரிக்கை களை வலியுறுத்தி உரையாற்றினர். இதில் சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப் உட்பட அனைத்து போக்குவரத்து ஊழியர் சங்கங்களும், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் நல அமைப் பின் நிர்வாகிகள் உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், புதிய ஊதிய ஒப் பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஆளும் கட்சியின் ஏடிபி தொழிற்சங்கத்தின் தொழி லாளர் விரோத போக்கை கண்டித் த்தும் முழக்கமிடப்பட்டது.
கோவை
கோவையில் அனைத்து அரசு போக்குவரத்து பணிமனைகள் முன்பு தொழிலாளர்கள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். கோவை சுங்கம் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் வேளாங்கண்ணி ராஜ் தலைமை தாங்கினார். இதில் போக் குவரத்து கழக தொழிலாளர்கள் ஏரா ளமானோர் பங்கேற்று கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக, போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத் தம் காரணமாக கோவையில் மிக குறைந்த அளவிலான அரசு பேருந் துகளே இயங்கியதால் பொதுமக் களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பிற்குள்ளானது.
சேலம்
சேலம் அஸ்தம்பட்டி அரசு விரைவு போக்குவரத்து பணிமனை முன்பு எல்பிஎப் செயலாளர் அன் பரசன் தலைமையில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் விரைவு போக்குவரத்து தொழிற் சங்க மாநில துணை பொதுச் செய லாளர் முருகேசன், ஐஎன்டியுசி சார் பில் கிருஷ்ணமூர்த்தி, ஆர்.சந்தி ரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஜான்சன்பேட்டை பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்,தி எல்டி எப் தலைவர் மோகன்ராஜ், இளவழ கன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல், ஆத்தூர், வாழப் பாடி, ஓமலூர், மேட்டூர், தாரமங் கலம், பள்ளபட்டி, எருமாபாளை யம், ராசிபுரம், நாமக்கல் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து பணி மனைகள் முன்பு காத்திருப்பு போராட்டங்கள் நடைபெற்றன. இதில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் திரளாக பங்கேற் றனர். இதற்கிடையே, போக்கு வரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக சேலம் கோட் டத்திற்குட்பட்ட பகுதிகளில் வெறும் 20 சதவிகிதத்திற்கும் குறை வான பேருந்துகள் மட்டுமே இயக் கப்பட்டது.
விபத்து நேரிடும் அபாயம்
இதற்கிடையே, போக்குவரத்து ஊழியர்கள் வெற்றிகரமாக வேலை நிறுத்தம் நடத்தி வரும் நிலையில், தமிழக அரசுப் போக்குவரத்து நிர்வா கம் வெளியாட்களை வைத்து பேருந்துகளை இயக்கத் தொடங்கி யுள்ளது. விதிமுறைப்படி வேலைநிறுத்தம் நடைபெறும்போது வெளி யாட்களை வைத்து பேருந்தை இயக்கக் கூடாது. மேலும் அனுபவ மற்றவர்கள், பேருந்துகளை இயக்குவதால் பொதுமக்கள் பாதுகாப் புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள் பெரும்பாலும் நல்ல நிலையில் பராமரிக்கப்படாமல், உதிரிபாகங்கள் இல்லாமல் இருக் கும் நிலையில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் அதை திறம்பட இயக்கி சமாளித்து வருகின்றனர். புதியவர்கள் இப்பேருந்துகளை இயக்கு வதால் விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. எனவே, இந்த குறுக்கு வழி யில் செயல்படுவதைத் தவிர்த்து தொழிலாளர் கோரிக்கைகளை நிறை வேற்ற அரசு முன்வர வேண்டும் என்றும் தொழிற்சங்கத்தினர் தெரிவித் தனர்.