வெள்ளி, பிப்ரவரி 26, 2021

districts

img

காலமுறை ஊதியம் வழங்கிடுக

திருப்பூர், பிப்.23-

காலமுறை ஊதியம் கோரி சத்து ணவு ஊழியர்கள் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். 38 ஆண்டுகளாக கொத்தடிமை களை போல் வேலை செய்யும் சத்து ணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். விலை வாசி உயர்வுக்கேற்ப மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். குறைந் தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிர மும், ஓய்வுபெறும் சத்துணவு ஊழி யர்களுக்கு வழங்கும் பணிக்கொ டையை ரூ.5 லட்சமாக வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலககங்கள் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மாவட்டத் தலை வர் பி.பாக்கியம் தலைமை வகித் தார். இதில், மாநிலச் செயலாளர் கு.சத்தி, மாநில செயற்குழு உறுப்பி னர் பி.ரீட்டா, முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.முருகே சன், மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.நாகராஜன், ஓய்வுபெற்ற சத்து ணவு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் முத்தமிழ்ராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இப்போராட்டத்தில், பெண் ஊழியர்கள் கருப்பு உடையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

கோவை

கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சத்துணவு ஊழி யர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சாரதாமணி தலைமை வகித்தார். இதில், மாநில தலைவர் பழனிச் சாமி, மாவட்டச் செயலாளர் எம்.பழ னிச்சாமி, சீனிவாசராகவன், அரசு ஊழியர் சங்க நிர்வாகி பி.செந்தில் குமார் உள்ளிட்ட 200க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டு கைதாகி னர்.

தருமபுரி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சத்துணவு ஊழி யர் சங்க மாவட்ட துணைத் தலை வர் பி.மகேஸ்வரி தலைமை வகித் தார். மாவட்டத் தலைவர் சி.எம்.நெடுஞ்செழியன், மாவட்டச் செய லாளர் சி.காவேரி, மாவட்டப் பொரு ளாளர் கே.தேவகி, ஜே.அனுசுயா, ஜி.வளர்மதி, பி.தேவேந்திரன், டி. சுகுமார் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் கோ.பழனியம் மாள், மாவட்டத் தலைவர் எம்.சுருளி நாதன், பொருளாளர் கே.புகழேந்தி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எம்.லில்லிபுஷ்பம், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பெரு மாள், ஓய்வூதியர் சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் துரை உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கைதாகினர்.

சேலம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் அமராவதி தலைமை வகித்தார். இதில், மாவட் டத் தலைவர் தங்கவேலன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட தலைவர் முருகப் பெருமாள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் மற்றும் சமையலர்கள் பங்கேற்று கைதாகினர்.

;