திருப்பூர், நவ.23- திருப்பூரில் குடியிருப்புக்கு மத்தியில் அமையவிருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிப் பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தனர். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சாலையில் உள்ள அம்மன் நகர், சோழன் நகர், ஜே.ஜே நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஏரா ளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந் நிலையில் அப்பகுதியில் ஏற்கனவே ஒரு மதுபானக்கடை உள்ளது. அத்துடன் இப் பகுதியில் மேலும் ஒரு அரசு மதுபானக் கடை அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
மீண்டும் ஒரு கடை அமைந்தால் அப்பகுதியில் பாதுகாப்பு கேள்விக்குறி யாகும் எனவும், பள்ளி மற்றும் வேலைக் குச் சென்று வரக்கூடிய பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அப்பகுதியில் அரசு மதுபானக் கடை அமைக்கக் கூடாது என மக்களி டம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி அப் பகுதி பெண்கள் உட்பட பொதுமக்கள் திங் களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர்.