திங்கள், ஜனவரி 18, 2021

districts

img

மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு இயக்கம்

திருப்பூர், டிச. 29 - தமிழகத்தில் அதிமுக அரசை அகற்றி ஆட்சி மாற்றத்தை ஏற்ப டுத்துவோம் என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட னர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி கவுண்டம்பாளையம் வரி வசூல் மையம் அருகில் செவ்வாயன்று மக்கள் சந்திப்பு இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந் நிகழ்விற்கு ஆர்.கதிர்வேல் தலைமை ஏற்றார். வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிச்சாமி உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.

இதில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், மாநகராட்சி 4 மற்றும் 7ஆவது வார்டு பகுதிகளில் குடிநீர், சாலை, சாக்கடை, தெரு விளக்கு, குப்பை அகற்றம் ஆகிய பிரச் சனைகளிலும் மெத்தனமான மாந கராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  

கோவை

கோவை, பீளமேட்டிலுள்ள தண் ணீர் பந்தல் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, சிங்காநல்லூர், வரத ராஜபுரம், மதுக்கரை ஆகிய பகுதியில் நடைபெற்ற இயக்கத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மனோகரன், சிங்கை நகர செய லாளர் வீ.தெய்வேந்திரன், மதுக்கரை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை மக்களிடம் விநியோகித்தனர்.

பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் உள்ளிட்ட இடங்களில்நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில், கட்சியின் ஆனைமலை தாலுகா செய லாளர் வி.எஸ்.பரமசிவம் உள்ளிட்ட  திரளானோர் கலந்து கொண்டனர். வடசித்தூர் ஊராட்சியில் கட்சி யின் மாவட்ட குழு உறுப்பினர் ஆர். பழனிச்சாமி தலைமையில் திரளா னோர் கலந்து கொண்டு பிரச்சாம் செய்தனர்.

தருமபுரி

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஒன்றிய செய லாளர் கே.குப்புசாமி தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என பிரச்சாரத்தில் ஈடு பட்டனர்.

;