தனியார் பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பள்ளி மாணவிகள் உள்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.
உடுமலை இருந்து கொழுமம் செல்லும் தனியார் பேருந்து இன்று காலை போத்தநாயக்கனூர் வரும் போது எதிரே ஜல்லி கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவிகள் உள்பட 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் காயம் அடைந்த அனைவரையும் உடுமலை அரசு மருந்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்,
இது கூறித்து போத்தநாயக்கனூர் மக்கள் தெரிவிக்கையில், மடத்துக்குளம் பகுதியில் இருந்து வடக்கு பகுதிகளுக்கு கிராவல்மண் மற்றும் ஜல்லிகளை ஏற்றிக்கொண்டு வரும் டிப்பர் லாரிகள் அதிவேகமாக செல்வதால் தான் இப்பகுதியில் பலமுறை விபத்துகள் ஏற்பட்டுள்ளது.
எனவே, அரசு அதிகாரிகள் மண் மற்றும் ஜல்லிகற்களை எடுத்துவரும் லாரிகளை கிராம்புற சாலைகளில் அனுமதிக்காமல் வேறு வழித்தடங்களில் செல்ல உத்தரவு இடவேண்டும் ஏன்றார்கள்.
முறையான கனிமவள உரிமம் இல்லாத காரணத்தால் தான் கிராம்புற சாலைகளில் லாரிகளை இயக்கி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. அரசு அதிகாரிகள் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.