வெள்ளி, பிப்ரவரி 26, 2021

districts

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்துக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூர், ஜன. 21– திருப்பூர் மாவட்ட ஜவுளித் தொழிலை கடுமையாக பாதித் துள்ள நூல் விலை உயர்வைக் கட் டுப்படுத்திட மத்திய, மாநில அரசு கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் தியாகி பழனிசாமி நிலை யத்தில், கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் டி.ஜெயபால் தலை மையில் புதன்கிழமை நடைபெற் றது. இக்கூட்டத்தில் மாநில செயற் குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் உள்பட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வரு மாறு:

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்துக!

ஜவுளி உற்பத்திக்கு மூலப்பொரு ளாக இருக்கும் நூல் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அத்துடன் செயற்கை பற்றாக்குறையும் ஏற் படுத்தப்படுகிறது. இதனால் திருப் பூர் மாவட்டத்தில் முதன்மைத் தொழிலாக இருக்கும் பின்னலாடை உற்பத்தி ஏற்றுமதி மற்றும் உள் நாட்டு தயாரிப்புகள், கிராமப்புறங்க ளில் இருக்கும் விசைத்தறி ஜவுளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. கடந்த காலங்களில் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்பட பல்வேறு பாதிப்பு களைச் சந்தித்து வந்ததுடன் கொரோனா பொது முடக்கம் காரண மாகவும் ஜவுளித் தொழில் தொய்வ டைந்தது. தற்போது இயல்பு நிலைக்கு மீண்டு வரும் நிலையில் நூல் விலை உயர்வும், பற்றாக்குறை யும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சு வதாக உள்ளது.

இதனால் ஜவுளித் தொழில் பாதிக்கப்பட்டு பல ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்திக்கும் நிலை ஏற்படும். விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பதற் காக உருவாக்கப்பட்ட இந்திய பருத் திக் கழகம் (சிசிஐ) தற்போது பன் னாட்டு, உள்நாட்டு பெருநிறுவ னங்களுக்கு ஆதரவாக செயல்படுவ தால்தான் அபரிமிதமான விலை உயர்வும், செயற்கைத் தட்டுப்பா டும் ஏற்படுகிறது. விவசாயிகளுக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைப்பதை உறுதிப்படுத்தும் அதே நேரத்தில், உள்நாட்டு ஜவுளித் தொழில் துறையினருக்கும் சரியான விலையில், தட்டுப்பாடு இல்லாமல் பஞ்சு, நூல் கிடைக்க வேண்டும். எனவே பெரு நிறுவனங்கள், இடைத்தரகர்களுக்கு ஆதாயம் கிடைக்கும் வகையில் கட்டுப்பாடு இல்லாமல் ஏற்றுமதி செய்யும் விலைக் கொள்கையை கைவிட வேண்டும்.  

மத்திய அரசு சிசிஐ மூலம் உள் நாட்டுத் தேவைக்கு பஞ்சு, நூல் கிடைப்பதை உறுதிப்படுத்திய பிறகு, ஏற்றுமதி செய்ய அனுமதிக் கும் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும். அதன் மூலம்தான் உள் நாட்டு ஜவுளித் தொழில், பல லட்சம் தொழிலாளர் வேலை வாய்ப்பு ஆகி யவற்றைப் பாதுகாக்க முடியும். எனவே நூல் விலையைக் கட்டுப் படுத்தவும், பதுக்கல், செயற்கை பற் றாக்குறை இல்லாமல் தொழில் துறைக்குத் தேவையான நூல் கிடைக்கவும் மத்திய அரசு உடனடி யாகத் தலையிட வேண்டும். தமிழக அரசு இதற்குத் தேவையான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

சாலைகளை செப்பனிட காத்திருப்புப் போராட்டம்

திருப்பூர் நகரிலும், சுற்றுவட் டார பகுதிகளிலும் உள்ளாட்சி துறையினர் பல்வேறு பணிகளுக் காக சாலைகளையும், வீதிகளையும் தோண்டுவதும், பணி முடிந்தபின் அதை சரிவர மூடாமலும், சீரமைக் காமலும் அரைகுறையாக விட்டு விடும் போக்கும் தொடர்கிறது. இத னால் மாநகரிலும், புறநகரப் பகுதி களிலும் போக்குவரத்துக்கு பயன் படுத்த முடியாத அளவுக்கு சாலை கள் படுமோசமாக, குண்டும், குழியு மாக, சேறும், சகதியுமாக உள்ளன. இதில் பயணம் செய்வோர் நிலை தடு மாறி விபத்தில் சிக்குவது தொடர்ந்து வருகிறது. அத்துடன் இயல்பான போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன நெருக்கடி, எரிபொருள் விர யம் ஏற்படுகிறது. போக்குவரத் துக்கு லாயக்கில்லாமல் படுமோச மான நிலையில் சாலைகள் இருந் தும் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சா லைத் துறையினர் மிகவும் அலட்சிய மாக, எவ்வித நடவடிக்கையும் எடுக் காமல் கண்டுகொள்ளாமல் இருப் பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு வன்மை யாக கண்டித்துள்ளது.  மேலும், பழுதடைந்துள்ள அனைத்து சாலை களையும் முழுமையாகச் செப்பனிட வும், புதிய தார் சாலைகள் அமைக்க வும் வலியுறுத்தி பிப்ரவரி 1 ஆம் தேதி திருப்பூர் குமரன் சாலை நெடுஞ் சாலைத் துறை அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத் தப்படும்.

பயோமெட்ரிக் முறையால் சிரமம் திருப்பூர் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுப் பொருட்கள் கொடுத்து முடித் திருக்கும் நிலையில், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநி யோகம் செய்ய பயோ மெட்ரிக் முறையில் பில் போடுவதில் மிகவும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இத னால் பொது மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தங்கள் வேலை, வரு மானத்தை இழப்பதுடன், கடைக ளில் விற்பனையாளர்களுடன் வாக் குவாதம் செய்யும் நிலை ஏற்படுகி றது. எனவே, பயோமெட்ரிக் பில் முறையில் உள்ள தாதமத்தைக் களைய தொழில்நுட்பரீதியாக விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை முந்தைய ஸ்கேன் முறையில் பில் போட்டு தாம தம் இல்லாமல் பொருட்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என்று திருப் பூர் மாவட்ட ஆட்சியரை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

பொய்வழக்கை வாபஸ் பெறுக! திருப்பூரில் குடியுரிமைத் திருத் தச் சட்டத்துக்கு எதிராக அமைதி யான முறையில் ஜனநாயக வழியில் போராட்டம் நடத்திய சிறுபான்மை யினர் உள்ளிட்ட பலர் மீது காவல் துறை பல்வேறு பிரிவுகளில் வழக் குப்பதிவு செய்துள்ளது. அச்சுறுத்தி பழிவாங்கும் நோக்கத்தில் புனை யப்பட்டுள்ள, ஜனநாயக விரோத மான, இந்த பொய் வழக்குகளை அரசு நிர்வாகம் உடனடியாக தள்ளு படி செய்ய வேண்டும். மேலும், அனைத்து குடும்ப அட்டைதாரர்க ளுக்கும் இலவச வேட்டி, சேலை வழங்க வேண்டும். திருப்பூர் மாநக ரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஆலோச னைக் குழுக் கூட்டத்தைக் கூட்டி இங்கு நடைபெற்றுள்ள பணிகள் விபரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

டிராக்டர் பேரணிக்கு ஆதரவு

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லியில் விவசாயிகள் வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின்ற னர். ஜனவரி 26ஆம் தேதி தில்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடை பெறும்போது, விவசாயிகள் டிராக் டர் அணிவகுப்பு நடத்தவும் திட்ட மிட்டுள்ளனர். நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இது போல் டிராக்டர் அணிவகுப்பு நடத்த முடிவு செய்த அடிப்படையில் திருப் பூரிலும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் டிராக்டர்கள், இருசக்கர வாகனங்க ளில் தேசிய கொடி கட்டி பேரணி நடத்துகின்றனர். இந்த பேரணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு மகத் தான ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

;