தாராபுரம், டிச. 9 - குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படும் தாராபுரம் காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து மாற் றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள ஆச்சியூர் தேசிய நெடுஞ்சாலை ராம்நகரில் வசித்து வருபவர் சின்னான் (65). மாற்றுத் திறனாளியான இவர் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகி றார். இவர், வீட்டின் அருகே வேலா யுதம் என்பவர் உணவு விடுதி நடத்தி வருகிறார். இங்கு சாப்பிட வரும் நபர்கள் தங்களது வாகனங் களை சின்னான் வீட்டிற்கு முன்பு நிறுத்தி செல்கின்றனர்.
இதுகுறித்து சின்னான் ஓட்டல் உரிமையாளர் வேலாயுதத்திடம் முறையிடவே ஆத்திரமடைந்த அவர் சின்னானை கட்டையால் கடுமையாக தாக்கி யுள்ளார். இதில், எழும்பு முறிவு உட்பட உடல் முழுவதும் பலத்த காய மடைந்த சின்னான் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், இந்த தாக்குதல் தொடர்பாக தாரா புரம் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் எவ்வித நடவடிக் கையும் எடுக்காமல் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப் படுகிறது.
இதையடுத்து தாராபுரம் அண்ணா சிலை அருகே புதனன்று அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான நலசங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் தாராபுரம் தாலுகா செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். இதில், மாவட்டத் தலைவர் ஜெய பால், செயலாளர் ராஜேஸ், பொரு ளாளர் ரமேஷ், சிஐடியு மாவட்ட துணை தலைவர் என்.கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.