districts

img

ஆடு, மாடு மேய்க்க பணம்: மலை மக்கள் எதிர்ப்பு

திருப்பத்தூர்,செப். 29- திருப்பத்தூர் மாவட்டம் சிங்காரப்பேட்டை வனச்சரக உட்கோட்டத்திற்குட்பட்ட கிளையூர், கல்லாத்தூர், துரிஞ்சிகுப்பம், மோட்டூர், ஊர்கவுண்டனூர், குண்டூர், ஜவ்வாது மலை, நெல்லிவாசல்நாடு, புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு என சுமார் 34 கிராமங் கள் உள்ளன. இங்கு வாழும் மலை வாழ் மக்களிடம் ஆடு மாடு மேய்ப்பதற்கு பணம் வசூலிப்தை கண்டித்து தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கம், ஜவ்வாது மலை வாழ் மக்கள் சங்கம் சார்பில் திருப்பத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் கலந்துகொண்டு மாநில தலைவர் பி.டில்லி பாபு பேசுகையில், மலை வாழ் மக்கள் வனப்பகுதி யில் ஆடு, மாடு மேய்ப்ப தற்கு பணம் வசூலிக்கப்படு கிறது. மேலும் அந்த மக்களை அச்சுறுத்தி அனு பவ நிலங்களை சமப்படுது வதற்கு அபராதம் விதிக்கப் படுகிறது. ஆனால் 2006 வன உரிமை சட்டத்தின்படி மலைவாழ் மக்கள் காட்டில் ஆடு, மாடு மேய்க்கவும், விறகு எடுக்கவும் உரிமை உள்ளது. எனவே தமிழக அரசு இது போன்ற அடாவடியில் ஈடு படும் அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஏ.ஆர்.லட்சுமணராஜா தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம், ஜவ்வாது மலை வாழ் மக்கள் சங்கத் தின் தலைவர் ஜெயராமன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சாமிநாதன், தாலுகா செயலாளர் எஸ்.காம ராஜ், சிபிஎம் தாலுகா செய லாளர் எம்.காசி, சிஐடியு அமைப்பாளர் சி.கேசவன், ஏலகிரி மலை வாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் மனோகர், ரவி, செல்வம், ரங்கன் உள்ட்ட பலர் கலந்து கொண்டனர்.