districts

img

பாளையங்கோட்டையில் நவம்பர் புரட்சி தின கருத்தரங்கம்

திருநெல்வேலி, நவ.20- பாளையங்கோட்டை நூற்  றாண்டு மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் புரட்சிதின கருத்தரங்கம் ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றது,  கருத்தரங்குக்கு முன்னதாக நூற்றாண்டு மண்டபம் முகப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்  னாள் மாவட்டச் செயலாளர் வீ. பழனி கட்சிக்கொடியை ஏற்றி  வைத்து பேசினார் . மாவட்டச் செய லாளர் க.ஸ்ரீராம் தலைமை தாங்கி னார். மாநிலக் குழு உறுப்பினர் பி. கற்பகம் வரவேற்று பேசினார். மாநில குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ் கரன் அறிமுக உரையாற்றினார். கருத்தரங்கில் கார்ப்பரேட் பாசி சம் வினையும் எதிர்வினையும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்த ரங்கிற்கு எஸ்.பெருமாள் தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பி னர் சுவாமிநாதன் கருத்துரையாற்றி னார். வகுப்புவாத சவால்கள் என்ற  தலைப்பில் நடைபெற்ற கருத்த ரங்கிற்கு எம்.சுடலைராஜ் தலைமை தாங்கினார். முனைவர் அருண்  கருத்துரைற்றினார். தென் அமெ ரிக்காவின் எழுச்சி என்ற தலைப் பில் நடைபெற்ற அமர்விற்கு ஆர்.எஸ்.துரைராஜ் தலைமை தாங்கி னார். பிரண்ட் லைன் முன்னாள் ஆசிரியர் ஆர்.விஜய் சங்கர் கருத்து ரையாற்றினார். தமிழகமும் வர்க் கப் போரும் என்ற தலைப்பில் நடை பெற்ற கருத்தரங்கிற்கு பீர்முகம் மது ஷா தலைமை தாங்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர் சங்க மாநிலத் தலை வர் மதுக்கூர் இராமலிங்கம் கருத் துரை ஆற்றினார். சோசலிசமே எதிர்  காலம் என்ற தலைப்பில் நடை பெற்ற கருத்தரங்கிற்கு ஆர்.மோகன் தலைமை தாங்கினார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி கருத்துரையாற்றி னார்.
பிரசுரம் வெளியீடு
கூட்டத்தில் ஆர்.எஸ்.செண்  பகம் எழுதிய சங் பரிவாரத்தின் பொய்யும் புரட்டும் என்ற தலைப் பில் பிரசுரம் வெளியிடப்பட்டது. இந்த பிரசுரத்தை எழுத்தாளர் ஆர். விஜய் சங்கர் வெளியிட, வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் அருள் பெற்றுக் கொண்டார். சிஐடியு மாநி லத் தலைவர் அ.சவுந்தரராசன் நிறைவுரையற்றினார். கருத்தரங்கில் குமரி முரசு  கலைக்குழுவின் கலை நிகழ்ச்சி கள் மற்றும் சென்னை காம்ரேட் டாக்கிசின் இசை பாடல்களும் பாடப்பட்டது. முத்து சுப்பிரமணியன் நன்றி கூறினார்.