மந்திரமா? தந்திரமா? - அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுக்கோட்டை புத்தகத் திரு விழாவில் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்வாக திங்கள்கிழமை மந்தி ரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் மான்போர்ட் பள்ளி, பிரக தாம்பாள் பள்ளி, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி மாணவர்கள் உட்பட சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அறிவியல் விழிப்புணர்வு நிகழ்வை அறிவியல் இயக்க மாநி லச் செயற்குழு உறுப்பினர் எல்.பிர பாகரன் தொடங்கி வைத்தார். மாநி லச் செயலாளர் டாக்டர் எஸ்.ஆர். சேதுராமன், வெறும் கையில் இருந்து விபூதி வரவழைத்தல், கை களை சிவப்பு நிறமாக மாற்றுதல், பந்துகளை காணாமல் ஆக்குதல், மூன்று கயிறுகளை ஒரே கயிறாக மாற்றுதல் உள்ளிட்ட, குழந்தைகள் வியக்கும் வகையிலான மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் மாவட்டத் துணைத் தலைவர் க.சதாசிவம், தொடு உணர்வு அறி தல், பயமில்லாமல் இருப்பது எப்படி? என்பது போன்ற எளிய அறி வியல் பரிசோதனைகளை செய்து காண்பித்தார். மாநிலச் செயலாளர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் நிகழ்வினை ஒருங்கிணைத்தார். புத்தகத் திரு விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் அ.மணவாளன், எம்.வீரமுத்து, முனைவர் ஆர்.ராஜ்குமார், கவிஞர் ஜீவி மற்றும் அறிவியல் இயக்க நிர்வாகிகள் ஜெயராம் கு.வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பல் மருத்துவர் போக்சோ சட்டத்தில் கைது
புதுக்கோட்டை, ஜூலை 29 - புதுக்கோட்டை திருக் கோகர்ணத்தைச் சேர்ந்த பல் மருத்துவர் ஒரு வர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை திருக் கோகர்ணம் மேல தெரு வைச் சேர்ந்த பல் மருத்து வர் அப்துல் மஜித்(36). இவர் திருக்கோகர்ணம் பகுதியில் பல் மருத்து வமனை நடத்தி வரு கிறார். இந்நிலையில், இவரது பல் மருத்துவ மனைக்கு அதே பகுதி யைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர், சிகிச்சைக்கு சென்ற போது பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி யின் தாயார் புதுக் கோட்டை அனைத்து மக ளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு அப்துல் மஜித்தை கைது செய்த னர்.
குப்பைகள், இறைச்சிக் கழிவுகளை எரிப்பதால் பொதுமக்கள் அவதி
பாபநாசம், ஜூலை 29 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த சக்கராப் பள்ளி சாதிக் நகரில் குப்பைக் கிடங்கு உள்ளது. சக்கராப் பள்ளி ஊராட்சியில் சேகரமாகும் குப்பைகள் இங்குதான் கொட்டப்படுகின்றன. இங்கு கொட்டப்படும் குப்பைகள், இறைச்சி கழிவு கள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் புகை, கழிவு களின் துர்நாற்றத்தால் அப்பகுதியில் உள்ள மில்லத் நகர் குடியிருப்பு வாசிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதைக் கண்டித்து, ஞாயிறன்று சக்கராப்பள்ளி கும்ப கோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் சாலை மறிய லில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட ஒருவர் கூறுகையில், “சாதிக் நகர் குப்பைக் கிடங்கு அருகில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. குப்பைகளை மட்டுமல்லாது, கோழி, மாடு இறைச்சி கழிவுகளையும் அங்கு கொட்டுகின்றனர். மாட்டை இறைச்சிக்காக அங்கேதான் அறுக்கின்றனர். இதனால் எழும் துர்நாற்றம் தாங்கிக் கொள்ள முடியா தது. மழை நாட்களில் குடியிருப்புகளில் இருக்கவே முடி யாது. குப்பைகளை தீ வைத்து எரிப்பதால், மூச்சுத் திணறுகிறது. குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த ஊராட்சியில் உள்ள சாலைகள் குண்டும், குழியு மாக போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளன. போட்ட சாலைகளும் தரமாகப் போடப்படவில்லை. ஊராட்சி நிர்வாகம் இயங்குகிறதா என தெரியவில்லை” என்றார். பாபநாசம் டி.எஸ்.பி அசோக் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தார்.
எட்டுப்புளிக்காடு 5 ஆம் நம்பர் வாய்க்காலைத் தூர்வாரக் கோரிக்கை
தஞ்சாவூர், ஜூலை 29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம், கரம்பயம்-பி கிளைக் கூட்டம், செல்வம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம், கிளைச் செயலாளர் கே.பழனிச்சாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கரம்பயம் ஊராட்சிக்குட்பட்ட, சேத மடைந்த அனைத்து சாலைகளையும் செப்பனிட வேண்டும். அனைத்து வார்டுகளிலும் உள்ள குடிதண்ணீர் பிரச்ச னையை உடனடியாக சரி செய்ய வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலை யில், உடனடியாக 5 ஆம் நம்பர் எட்டுப்புளிக்காடு வாய்க்கா லில் உள்ள செடி, கொடிகள், புதர்களை அகற்றி மராமத்து செய்து முழுமையாகத் தூர்வார வேண்டும். இந்த வாய்க்காலை உடனடியாக தூர்வாரத் தவறி னால், பொதுப்பணித் துறையை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறை சொற்பொழிவு
தஞ்சாவூர், ஜூலை 29- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக, மொழிப்புல அவையத்தில் இலக்கியத் துறையின் சார்பாக, திங்கள் கிழமை சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்வில், மாணவர்களைக் கவிஞராகவும், பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் தனது படைப் பாற்றலில் சிறந்து விளங்கிட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இலக்கியத்துறைப் பேராசிரியர் முனைவர் பெ. இளையாப்பிள்ளை நோக்கவுரை வழங்கினார். பல்கலைக்கழகத்தின் பதிவாளர்(பொ), சி.தியாக ராஜன் தலைமை வகித்தார். சாகித்ய அகாடமி ஆலோ சனைக் குழு உறுப்பினரும், சமூகத்தின் அவலங்களைத் தன் எழுத்துகளால் மக்களிடையே கொண்டு சேர்க்கும் எழுத்தாளருமான சுப்பிரபாரதி மணியன், சிறுகதை, நாவல்களின் போக்கு, வாழ்க்கை அனுபவத்தைக் கதையாக மாற்றும் முறைமை மற்றும் தனது நாவல் படைப்புகளின் அனுபவம் போன்றவை குறித்து சிறப் புரையாற்றினார். இந்நிகழ்வில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழியல் துறைப் பேராசிரியர் (ஓய்வு) க.அன்பழ கன் கலந்து கொண்டார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறை மற்றும் பிற துறை பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இலக்கியத் துறைத் தலைவர் பேராசிரி யர் ஜெ.தேவி வரவேற்றார். முதுகலை இரண்டாமாண்டு மாணவன் சே.முத்தமிழ்செல்வன் நன்றி கூறினார்.
உக்கடை பேருந்து நிறுத்தம் சீர் செய்யப்படுமா?
தஞ்சாவூர், ஜூலை 29- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே தென்னங்குடி உக்கடை பால் பண்ணை நிறுத்தம் அருகில், மாவடு குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பேருந்து நிறுத்தம் உள்ளது. இது திருப்பூரணிக்காடு, களத் தூர், திருச்சிற்றம்பலம் வழியாக பட்டுக் கோட்டை செல்லும் முக்கிய பாதையாக உள்ளது. இப்பகுதியில் உள்ள பொது மக்கள் இந்த பேருந்து நிறுத்தத்தை வெயில் மற்றும் மழைக்காலங்களில் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில வருடங்களாகவே இந்த பேருந்து நிறுத்தம் பராமரிக்கப்படாமல், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டும், இரவு நேரங்களில் மது அருந்தும் கூடார மாகவும் மா விட்டது. இதில், அமர்ந்து மது அருந்திவிட்டு பாட்டில்கள் மற்றும் பிளாஸ் டிக் டம்ளர்களை மது பிரியர்கள் போட்டு விட்டுச் செல்கின்றனர். சிலர் மது போ தையில் இந்த பேருந்து நிறுத்தத்திலேயே அசுத்தம் செய்து விட்டு செல்கின்றனர். எனவே, இந்த பேருந்து நிறுத்தத்தை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுத்தம் செய்து, இதன் அருகில் கிடக்கும் மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவு களை அகற்றி சுகாதாரம் காக்க வேண்டும் என பேருந்து நிறுத்தத்தை உபயோகிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.