districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குச் சேகரிப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி 23 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆனந்தன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணை தலைவர் முருகேசன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் ரவி மற்றும் மாதர் சங்கத்தினர் துண்டு பிரசுரங்கள் கொடுத்து அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பேரூராட்சி 1 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பூபதி சரவணன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.பழநிசாமி தலைமையில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பில், ஒன்றிய செயலாளர் டி.ரஜினிகாந்த், ஒன்றியக்குழு உறுப்பினர் செல்லத்துரை, கிளை செயலாளர் பி.தமிழ்ச்செல்வன், பி.சண்முகம் உள்பட பலர் வீடு வீடாக சென்று அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.

கும்பகோணம் மாநகராட்சி 34 ஆவது வார்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஆ.செல்வம் 34 ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில், திமக கும்பகோணம் தெற்கு ஒன்றிய செயலாளர் இரா.அசோக்குமார் தலைமையில் அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், நகரச் செயலாளர் செந்தில்குமார், நகர குழு உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

நாகப்பட்டினம் நகராட்சி 32 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடுகிற சிபிஎம் வேட்பாளர் எஸ்.ஜெயலட்சுமி வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது திமுக தலைமையிலான கூட்டணி கட்சி தலைவர்கள் உடனிருந்தனர். மாதர் சங்கத்தினர் பலர் வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி 3 ஆவது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொன்னழகன் மாகாளிபட்டியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், வட்டக் குழு உறுப்பினர்கள் சீனிவாசன், ஷாஜகான், முத்துசாமி, ரவி, கிளைச் செயலாளர் சிவராமன் உள்ளிட்ட பலர் அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர்.