அரியலூர், நவ.7- ஜெயங்கொண்டம் அருகே, சேதமடைந்து ஆபத்தான நிலையில் நிற்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள குறிச்சி கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டப் பட்டு, கிராம மக்களுக்கு குடிநீர் விநி யோகம் செய்யப்பட்டு வந்தது. நீண்ட வருடங்கள் ஆன நிலையில் மேல் நிலை நீர் தேக்கத் தொட்டியில் தூண்க ளில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கம்பிகளாகக் காட்சி தரு கின்றன. நான்கு தூண்களும் சேத மடைந்து எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் உள்ளன. இந்த மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியைச் சுற்றி, வீடுகள், பள்ளி மற்றும் போக்குவரத்துக்கு பயன்டும் சாலையும் உள்ளது. ஏதாவது அசம்பா விதம் நடந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் அச்சம் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வா கம் உரிய நடவடிக்கை எடுத்து சேத மடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.