districts

திருச்சி முக்கிய செய்திகள்

மன்னார்குடியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவாரூர் மாவட்ட 15வது மாநாடு

மன்னார்குடி, டிச.14 - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவாரூர் மாவட்ட 15வது மாநாடு மன்னார்குடியில் தை.புகழேந்தி நினைவரங்கில், மாவட்டத் துணை தலைவர் ப.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.  மாநில செயற்குழு உறுப்பினர் வெ.தேவதாசன், மேனாள் மாநில  செயலாளர் இரா.இயேசுதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழிலரசி அறிவியல் இயக்கப் பாடல் பாடிய பின், மன்னார்குடி கிளைத்தலை வர் எஸ்.அன்பரசு வரவேற்புரை ஆற்றினார். உளவியல் பேராசிரியர் ஜே. பிரகாஷ், “குழந்தைகள் மீதான வன்முறை விழிப்புணர்வு” குறித்து பேசி னார். திருவாரூர் மாவட்டத்தில் அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன், அறிவியல் இயக்கத்தின் பல்வேறு செயல்பாடுகளை விளக்கியதுடன், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் அறிவியல் இயக்கத்தின் பங்கேற்பு பற்றி வலியுறுத்தி, மாநாட்டை தொடங்கி வைத்தார்.  மாவட்ட வேலை அறிக்கையை யு.எஸ்.பொன்முடியும், மாவட்டப் பொருளா ளர் வா.சுரேஷ் வரவு செலவுக் கணக்கையும் முன் வைத்தனர்.  புதிய மாவட்டத் தலைவராக யு.எஸ்.பொன்முடி, மாவட்டச் செயலாள ராக பி.சங்கரலிங்கம், மாவட்டப் பொருளாளராக எம்.சாந்தகுமாரி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து, மாநிலத் துணைத் தலைவர் முனைவர் வெ.சுகுமாரன்  நிறைவுரை ஆற்றி னார். நீட் தேர்வினை அந்தந்த மாநில விருப்பத்தின் அடிப்படையில் அமல்ப டுத்திட ஒன்றிய அரசு சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக கே.வி.பாஸ்கரன் நன்றி கூறினார்.

கொரோனா தடுப்பு ஊசி  செலுத்தினால் மட்டுமே பொது இடங்களில் அனுமதி பொன்னமராவதி பேரூராட்சி அறிவிப்பு

பொன்னமராவதி, டிச.14 - பொன்னமராவதி பேரூ ராட்சி அலுவலகம் முன்பு  பொன்னமராவதி பேரூ ராட்சி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து  துறை சார்பில் அறி விப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 71 உட்பிரிவு(1)ன்படி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை. பொன்னமராவதியில் நியாய விலைக் கடைகள், வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், திரையரங்கம், திருமண மண்டபம், தங்கும் விடுதிகள், டீ கடைகள், வங்கிகள், பள்ளிகள், அரசு  மற்றும் தனியார் மருத்துவ மனைகள், விளையாட்டு மை தானங்கள், துணிக்கடைகள், கடைவீதிகள், ஹோட்டல் கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்க ளில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை மட்டுமே உள்ளே அனு மதிக்க வேண்டும்.  விதிமுறைகளை பின்பற் றாத பொதுமக்கள், நிறுவன  உரிமையாளர்கள் மீது உரிய  நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பான மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனரின் கடி தத்தை பொன்னமராவதி பேரூராட்சி பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவ னங்கள், அலுவலகங்களில் வழங்கிய சுகாதார ஆய்வா ளர் தியாகராஜன், அனைவ ரும் கொரோனா தடுப்பூசி  செலுத்தி அதன் சான்றிதழை  கையில் வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தி னார்.

தஞ்சாவூரில் எல்ஐசி  புதிய பாலிசி அறிமுக விழா 

தஞ்சாவூர், டிச.14 - தஞ்சாவூர் எல்ஐசி கோட்ட அலுவலகத்தில் திங்கள்கிழமை  நடைபெற்ற நிகழ்ச்சியில், இளம் தலைமுறையினருக்கான “தன் ரேகா” என்கிற புதிய பாலிசி அறிமுக விழா நடை பெற்றது.  தஞ்சை பாரத் கல்வி குழுமச் செயலாளர் புனிதா கணேசன்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதிய பாலிசியை அறி முகம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், எல்ஐசி தஞ்சா வூர் முதுநிலை கோட்ட மேலாளர் கே.வெங்கட்ராமன் பேசுகை யில், “தன் ரேகா” அதிகபட்ச பாலிசி காலம் மிகுந்த பயன ளிக்கும். 6ஆம் ஆண்டு பாலிசி காலத்தில் இருந்து, ரூ. 1000 காப்பீட்டுத் தொகைக்கு ரூ.50 உத்தரவாத கூடுதல் தொகை யாக வழங்கப்படும். 21 முதல் 30 பாலிசி காலம் வரை உத்தரவாத கூடுதல் தொகை ரூ.55ம், 31 முதல் 40 பாலிசி  காலம் வரை உத்தரவாத கூடுதல் தொகை ரூ.60ம் வழங்கப்ப டும்.  பாலிசி காலம் 20, 30 மற்றும் 40 ஆண்டுகள். பிரீமி யத்தை ஒற்றைத் தவணையாகவோ அல்லது 10,15,  30 ஆண்டுகளில் செலுத்தலாம். இது இளம் பெற்றோர்க ளுக்கு மிகவும் உகந்த பாலிசி. குழந்தைகளின் கல்வி மற்றும்  ஓய்வூதியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். வருமானவரி விலக்கு பெறலாம். முதிர்வு மற்றும் இறப்புரிமைத் தொ கையை பெற, செய்யப்பட்டுள்ள தேர்வுகளை பொறுத்து பய னாளர்கள் தங்களுடைய தேவைகளுக்கேற்ப பயன்களைப் பெறலாம்” என்றார்.  விழாவில் முதல் பாலிசியை வினோத் சங்கர் பெற்றுக் 

 

;