districts

திருச்சி முக்கிய செய்திகள்

பட்டவர்த்தி அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த எதிர்ப்பு: கற்களை வீசி வன்முறை சிபிஎம் கண்டனம்

மயிலாடுதுறை, டிச.7 - டாக்டர் அம்பேத்கரின் நினைவு  தினத்தையொட்டி அவரது உருவப்படத் திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய  எதிர்ப்பு தெரிவித்து கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்ட னத்தை தெரிவித்துள்ளது. டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை யொட்டி திங்களன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள அவரது சிலை களுக்கும், உருவப்படத்தை பொது இடங்க ளில் வைத்தும் பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செய்தனர்.  இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகேயுள்ள பட்டவர்த்தி கிராமத்தில் மதகடி என்கிற இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிலர் டாக்டர் அம்பேத்கரின் படத்தை வைத்து  மாலை அணிவிக்க முயன்ற நிலையில், அதே பகுதியை சேர்ந்த சாதி வெறியர்கள் சிலர்  எதிர்ப்பு தெரிவித்து, நிகழ்ச்சியை நடத்தவிடா மல் தடுத்ததோடு, கற்களை வீசி கலவரத்தை யும் ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத் தியது.  இச்சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரி வித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன், அரசியல் சாசனத்தை எழுதிய டாக்டர்  அம்பேத்கரின் படத்தை வைத்து மரியாதை செய்வதை எதிர்த்து கலவரத்தில் ஈடுபட்ட சம்ப வம் அதிர்ச்சியாக இருக்கிறது. கலவரத்தை  திட்டமிட்டு ஏற்படுத்தி, இதை சாதி பிரச்ச னையாக்கி அமைதியை சீர்குலைக்க முயன்ற  சாதி வெறியர்களை மாவட்ட காவல்துறை கைது செய்வதோடு, அப்பகுதியில் நிலவும் பதற்றத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தியுள்ளார்.

டிச.10 திருச்சியில் 13 மையங்களில்  வாகன நிறுத்த போராட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச. 7 - ஹைதராபாத்தில் நடைபெற்ற சிஐடியு அகில இந்திய பொதுக்குழு மற்றும் கோவையில் நடைபெற்ற மாநிலக்குழு கூட்ட முடிவுகள் விளக்க சிறப்பு  பேரவை செவ்வாயன்று சிஐடியு திருச்சி மாவட்ட அலுவலகத்தில் நடை பெற்றது. சிஐடியு மாநகர் மாவட்ட துணை தலைவர் ஜெயபால் தலைமை  வகித்தார். டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற உள்ள வாகன நிறுத்த போராட்டம் மற்றும் மாவட்ட குழு முடிவுகளை விளக்கி மாநகர் மாவட்ட செயலா ளர் ரெங்கராஜன் பேசினார். பொதுக் குழு முடிவுகள், மாநிலக்குழு முடிவுகள்  குறித்து மாநில துணை தலைவர் சந்திரன் பேசினார். முடிவில் சாலை போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் சந்திரன் நன்றி கூறினார்.

பயிர் காப்பீடு வழங்கவில்லை: விவசாயிகள் சாலை மறியல்

அறந்தாங்கி, டிச.7 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் 2020 - 2021 ஆம் ஆண்டு தொடர் மழையால் பாதிக்கப்பட்ட, விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை  இதுவரை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக ஒரு மாதமாக பல  கட்ட போராட்டங்கள் நடத்தியும் காப்பீடு தொகை வழங்க எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இதனால் செவ்வாயன்று மணமேல்குடி வேளாண்மை துறை அலுவலகம் முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் கரு.இராமநாதன் தலைமை யில், விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாய கூட்டமைப்பை சேர்ந்த விவ சாயிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஊராட்சி மன்ற இ-சேவை மையத்தில் அதிமுக உறுப்பினர் ஆக்கிரமிப்பு ஊராட்சி மன்ற தலைவர் புகார் 

தஞ்சாவூர், டிச.7 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் செருபாலக்காடு ஊராட்சி மன்ற இ-சேவை மையத்தின் பூட்டை  உடைத்து அதிமுக கிளைச் செயலாளர் ஆக்கிரமித்துள்ள தாகவும், இதனை கேட்டதற்கு மிரட்டல் விடுத்ததாகவும் செருபாலக்காடு ஊராட்சி மன்ற தலைவர் ருக்மணி மணியன்  சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தில் புகார் செய்து உள்ளார்.  அந்தப் புகாரில், “செருபாலக்காடு ஊராட்சி மன்ற அலு வலகம் அருகே வசிக்கும் அதிமுக கிளைச் செயலாளர் காவிய ராசன் என்பவர் ஊராட்சி மன்ற இ-சேவை மையத்தின் பூட்டை உடைத்து குடும்பத்துடன் தங்கி ஆக்கிரமித்துள்ளார். இ- சேவை மையத்தில் கிராம கிளை அங்காடி செயல்பட்டு வரு கிறது. அங்காடியில் உள்ள பொருட்கள் காணாமல் போகி றது.  இதுகுறித்து கேட்டதற்கு மிரட்டுகிறார். தொடர் மழை யால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்திருந்தது. இல்லம் தேடி கல்வி திட்ட தொடக்க விழாவிற்கு சென்ற என்னை,  “மழை நீரை வடிக்க முடியாத நீ எல்லாம் எதற்கு ஊராட்சி மன்ற  தலைவராக இருக்கிறாய். பதவியை ராஜினாமா செய், இல்லை என்றால் கொலை செய்துவிடுவேன்” என்று மிரட்டு கிறார்.  காவியராசனால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை  உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென” குறிப்பிட்டுள்ளார்.  புகார் மனுவின் நகலை முதலமைச்சரின் தனிப்பிரிவு, தஞ்சாவூர் ஆட்சியர், தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ளார்.

ஆரியச்சேரி கிராமத்தில்  இல்லம் தேடி கல்வித் திட்டம் புதிய மையம் தொடக்கம்

கும்பகோணம், டிச. 7 - தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் ஆரியச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சார்பில்  ‘இல்லம் தேடி கல்வித்திட்டம்’ புதிய மையம் தொடக்க விழா  ஆரியச்சேரி ஜீவா நகர் பகுதியில் தொடங்கப்பட்டது. விழா விற்கு திருவிடைமருதூர் வட்டாரக் கல்வி அலுவலர் சு.சிவ குருநாதன் தலைமையேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர் குத்துவிளக்கேற்றி திட்டத்தைத் தொடங்கி வைத்து, திட்டத்தின் சிறப்பை விளக்கி பேசினார். தன்னார்வலர் முத்துச் செல்வி உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். 

;