districts

திருச்சி முக்கிய செய்திகள்

மணமேல்குடி அரசு பள்ளியில் இல்லம் தேடி கல்வி பயணம்

அறந்தாங்கி, டிச.14 - புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி  வழி காட்டுதலின்படி, மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சியினை பள்ளியின் தலை மையாசிரியர் ஜீவானந்தம் தொடங்கி வைத்தார். மணமேல்குடி ஒன்றியம்  வட்டார வளமைய மேற்பார்வையா ளர் பொறுப்பு சிவயோகம்  முன்னிலை வகித்தார். இல்லம்  தேடி கல்வி நிகழ்ச்சி விழிப்பு ணர்வை ஆடல்-பாடல், கரகாட் டம், ஒயிலாட்டம், பறையாட்டம் போன்றவற்றின் மூலம் மாண வர்களுக்கு இல்லம் தேடி கல்வி யில் எவ்வாறு கற்பது என தெரி விக்கப்பட்டது. மாணவர்களிடையே கேள்விகள் கேட்டு கலைக்குழுவினர் உற்சாகப்படுத்தினர். ஆசிரியர்கள்,  மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அரியலூரில் இன்று பட்டா திருத்த சிறப்பு முகாம்

ஆட்சியர் தகவல்

அரியலூர், டிச. 14- விவசாயிகள், வீட்டு உரி மையாளர்களின் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங் கள் தொடர்பான பிரச்ச னைகளுக்கு தீர்வு காண பட்டா திருத்த சிறப்பு முகாம் அரியலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட கிராமங்களில் டிச.15 (புதன்கிழமை) அன்று  நடக்கவுள்ளது. அரியலூர் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் உள்ள அனைத்து வருவாய்  கிராமங்களிலும், விவசா யிகள், வீட்டு உரிமையாளர்க ளின் பட்டாவில் உள்ள சிறு  கணினி திருத்தங்கள் தொ டர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கென துணை ஆட்சியர் நிலையில் கண்கா ணிப்பு மற்றும் தீர்வு அலுவ லர்கள் தலைமையில் வாரந் தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. முகா மில் பெறப்படும் சிறு கணினி  திருத்தம் சார்ந்த மனுக்க ளுக்கு அன்றைய தினமே தீர்வு காணப்படும்.  வட்டம் வாரியாக டிச.15 (புதன்கிழமை) முகாம் நடக்க உள்ள கிராமங்களின் விவரம்: அரியலூர் வட்டத்தில் கடுகூர் மற்றும் அயன் ஆத்தூர் கிராமங்களுக்கு கடுகூர் கிராம நிர்வாக  அலுவலர் அலுவலகத்தி லும், அழகிய மணவாளம் மற்றும் காமரசவள்ளி கிரா மங்களுக்கு அழகிய மண வாளம் கிராம சேவை மைய  கட்டிடத்திலும், செந்துறை வட்டத்தில் மணக்குடையான் கிராமத்திற்கு மணக்குடை யான் கிராம நிர்வாக அலு வலர் அலுவலகத்திலும், உடையார்பாளையம் வட்டத் தில் ஆமணக்கந்தோண்டி, உட்கோட்டை(வ) மற்றும் உட்கோட்டை(தெ) கிராமங் களுக்கு உட்கோட்டை(வ) கிராம நிர்வாக அலுவலர் அலு வலகத்திலும், வெண்மான் கொண்டான்(கி) மற்றும்  பருக்கல்(மே) கிராமங்க ளுக்கு வெண்மான்கொண் டான்(கி) கிராம நிர்வாக  அலுவலர் அலுவலகத்தி லும், ஆண்டிமடம் வட்டத்தில் அணிக்குதிச்சான்(வ) மற்றும் அணிக்குதிச்சான்(தெ) கிராமங்களுக்கு அணிக் குதிச்சான்(தெ) கிராம நிர்வாக அலுவலர் அலுவல கத்திலும் முகாம் நடக்க உள்ளது.  மேற்படி இந்த சிறப்பு முகாமில் சிறு கணினி திருத் தங்கள் தொடர்பான பிரச்ச னைகளுக்கு, பொதுமக்கள் தங்களிடம் உள்ள ஆவணங் களுடன் மனுக்கள் அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட  28 தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை  வழங்க கோரி அமைச்சரிடம் சிஐடியு மனு

திருச்சிராப்பள்ளி, டிச.14 -  திருச்சி அரசு கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் செவ்வாயன்று புற்றுநோய் கண்டறிதல் மையத்தினையும், படுக்கைப் புண்கள் பராமரிப்பு சிகிச்சை மையத்தினையும் திறந்து வைத்து, கொ ரோனா நோய்த்தொற்று கண்டறியும் புதிய  ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கருவியினை யும் மருத்துவ சேவைக்கு வழங்கினர்.   பின்னர் அவரிடம் மகாத்மா காந்தி நினைவு  அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் மாறன் கொடுத்த மனுவில் கூறியி ருந்ததாவது:  “திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு  பொது மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் 10 ஆண்டுகளாக தொழி லாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் 104  தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மருத்துவமனை நிர்வாகம் 70 தொழி லாளர்களை வேலைக்கு எடுத்து விட்டார்கள்.  மீதமுள்ள 28 தொழிலாளர்களை  வேலைக்கு  எடுக்கவில்லை. இதனால் 28 தொழிலா ளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது.  கொரோனா பேரிடர் காலத்தில் 28 தொழி லாளர்கள் அர்ப்பணிப்போடு பணிபுரிந்து வந்தார்கள். ஆனால் தற்போது மருத்துவ மனை நிர்வாகம் எந்த காரணமும் சொல்லா மல் வேலையை விட்டு நிறுத்தியதால், 28  தொழிலாளர்களின் குடும்பம் பாதிக்கப்பட்டு உள்ளது. தொழிலாளர்களின் குடும்பம் ஏழ்மையான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. 28 தொழிலாளர்களின் பிள்ளைகள் பள்ளிக் கூடத்திற்கு பணம் கட்ட முடியவில்லை. இந்த வேலையை மட்டும் நம்பியே குடும்பம் நடத்தி  வந்தனர்.  தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பல  இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். எனவே தாங்கள் தொழிலாளர்களின் நலனுக்காக, நடவடிக்கை எடுத்து வேலையிலிருந்து நீக்கிய 28 தொழிலாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்க ஆவன செய்யுமாறு தொ ழிற்சங்கம் பொறுப்புணர்வோடும், தாழ்மையு டன் கேட்டுக் கொள்கிறது.  இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

கும்பகோணம் மக்களின் வரவேற்பை பெற்ற “முச்சந்தி கொரோனா தடுப்பூசி முகாம்” 100 நாட்களில் 21,174 பேருக்கு தடுப்பூசி

கும்பகோணம், டிச.14 - கும்பகோணத்தில் தொடர்ந்து 100 நாட்கள் கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தி வரும், “முச்சந்தி தடுப்பூசி முகாம்” பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கும்பகோணம் மடத்துத் தெரு, காமாட்சி ஜோசியர் தெரு, சந்திப்பு பகுதி மூன்று சாலைகள் சந்திப்பத முச்சந்தி பகுதியாகும். இந்த பகுதியில் நகராட்சி 10-வது வார்டைச் சேர்ந்த முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சோடா.இரா.கிருஷ்ணமூர்த்தி என்பவர், தனது வார்டு மக்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பயன்பெறும் வகையில், தான் வைத்துள்ள பெட்டிக்கடை அருகே சாமியானா பந்தல் ஒன்றை அமைத்து கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.  நகராட்சி நிர்வாகம் இந்த இடத்தில் தினமும் பொதுமக்களுக்கு தடுப்பூசியை செலுத்தி வருகிறது. அதன்படி திங்களன்று வரை 100 நாட்கள் தொடர்ந்து 21,174 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் உள்ள நகராட்சி மருத்துவமனைகளைவிட இந்த முச்சந்தி தடுப்பூசி முகாமில் அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கும்பகோணம் முச்சந்தி தடுப்பூசி முகாமின் 100-வது நாளை முன்னிட்டு திங்களன்று 300 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாமினை கும்பகோணம் சட்டமன்ற தொகுதி  உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் சு.கல்யாணசுந்தரம், ஒன்றிய குழு துணைத் தலைவர் தி.கணேசன், கோட்டாட்சியர் லதா, வட்டாட்சியர் பிரபாகரன் மற்றும் அரசு மருத்துமவனை மருத்துவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு முகாமினை ஏற்பாடு செய்தவருக்கும், முகாமில் தொடர்ந்து பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

மக்கள் குறைதீர் கூட்டம்

அரியலூர், டிச.14 - அரியலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகக் கூட்டரங் கில், “மக்கள் குறை தீர்க்கும்  நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி  தலைமையில் நடைபெற் றது. கூட்டத்தில், பல்வேறு  கோரிக்கைகள் அடங்கிய 391 மனுக்கள் பொதுமக்க ளிடமிருந்து பெறப்பட்டு, மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உட னடி நடவடிக்கைகள் மேற் கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டது. 

இலவச கண் பரிசோதனை முகாம்

தஞ்சாவூர், டிச.14 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி கோகனட் சிட்டி  இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம்,  பேராவூரணி ஏ.வி.ஆர். தன லட்சுமி ஜூவல்லர்ஸ் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க  நிதி உதவியுடன் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்  நடைபெற்றது.  இம்முகாமிற்கு கோக னட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்க தலைவர் வ. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஏ.வி. ஆர். தனலட்சுமி ஜூவல் லர்ஸ் உரிமையாளர் சுதர் சனவள்ளி பாலாஜி குத்து விளக்கு ஏற்றி வைத்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக் குமார் முகாமை துவக்கி  வைத்தார். சேதுபாவா சத்திரம் ஒன்றிய பெருந் தலைவர் மு.கி.முத்து மாணிக்கம் கலந்து கொண்டார். முகாமில், பேராவூரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 550  பேர் கலந்து கொண்டு பரி சோதனை செய்து கொண்ட னர். 140 பேர் கண்புரை அறுவை சி‌கி‌ச்சைக்கு மதுரை அரவிந்த் கண்  மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டனர்.

 

;