districts

img

கற்றல் மையங்களில் மரக்கன்றுகள் நடும் விழா

அறந்தாங்கி, செப்.9 - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், புதுக் கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் மற்றும்  அறந்தாங்கி கல்வி மாவட்ட அலு வலர் (தொடக்க நிலை) ஆகியோரின் வழிகாட்டுதலின்படி  மணமேல்குடி ஒன்றியத் திற்குட்பட்ட புதிய பாரத எழுத்தறிவு கற்றல்  மையங்களில் மரக்கன்று நடும் விழா நடை பெற்றது. இந்நிகழ்வில் மேலஸ்தானம், மும்பாலைப் பட்டினம், கொடிக்கம்பம், நிலையூர், விச்சூர்  மணக்காடு, புதுக்குடி, ரெட்டையாளம் உள்ளிட்ட புதிய பாரத கற்றல் மையங்க ளின் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம், மேலஸ்தானம் நடு நிலைப் பள்ளி  தலைமையாசிரியர் வாசுகி மற்றும் ஆசிரியர்கள், இல்லம் தேடிக் கல்வி  ஒருங்கிணைப்பாளர்  கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டார். இதில் ஆசிரியர் பயிற்று நர்கள், தலைமை ஆசிரியர்கள், தன்னார்வ லர்கள், கற்போர்கள் கலந்து கொண்டனர்.