districts

img

டெல்டா மாவட்டங்களில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருப்பூர், ஜூன் 24- கழகங்களின் வரவுக்கும் செல வுக்குமான வித்தியாசத் தொகையை  பட்ஜெட்டில் ஒதுக்கி வழங்க வேண் டும், 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச் சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் திங்க ளன்று உண்ணாநிலைப் போராட் டதை தொடங்கினர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் சார்பில்  மாநிலம் முழுவதும் உண்ணாநிலை  போராட்டம் திங்களன்று நடைபெ றும் என அறிவித்திருந்தனர். அதன் படி திருப்பூரில் சம்மேளனத்தின் மண் டலத் தலைவர் எம்.கந்தசாமி தலைமை யில் உண்ணாநிலை போராட்டம் துவங்கியது. இப்போட்டத்தை சிஐ டியு மாநில துணை பொதுச்செயலா ளர் எஸ்.கண்ணன் துவக்கி வைத் தார். சம்மேளத்தின் மாவட்ட துணைச்  செயலாளர் எம்.மனோகரன் வர வேற்று பேசினார். மண்டல பொதுச் செயலாளர் பி.செல்லதுரை, பொரு ளாளர் என்.சுப்பிரமணி, துணை  பொதுச்செயலாளர்கள் வி.விஸ்வ நாதன், டி.தேவநாதன்,கே.கொங்கு ராஜ் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். இதில், போக்கு வரத்துக் கழகங்களை பாதுகாக்க வர வுக்கும் செலவுக்குமான வித்தியாச  தொகைக்கான நிதியினை பட்ஜெட் டில் ஒதுக்கிட வேண்டும். ஊதிய ஒப் பந்த பேச்சுவார்த்தையை உடனடி யாக பேசி முடித்திட வேண்டும். 2022  டிசம்பர் முதல் ஓய்வு பெற்ற பணி யாளர்களுக்கு வழங்க வேண்டிய  பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். 2003க்கு பின் பணி யில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். ஓய்வூதியர்க ளுக்கு அகவிலைப்படி உயர்வு மற் றும் ஒப்பந்தப்படி ஓய்வூதிய முறைப் படுத்தி வழங்க வேண்டும். காலிப்பணி யிடங்களில் நிரந்தரமான முறையில் தொழிலாளர்களை நியமனம் செய்ய  வேண்டும். இறந்து போன தொழிலா ளர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும். ஓய்வூ தியர்களுக்கு இதரத் துறை ஊழியர்க ளைப் போல் மருத்துவ காப்பீட்டு திட் டத்தை அமல்படுத்த வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டது. இதில், ஓய்வுபெற்றோர் நல  அமைப்பு நிர்வாகிகள் கே.ரவிசந்தி ரன், பொன்னுசாமி, பழனிசாமி, ராஜேந்திரன் உட்பட போக்குவரத்து தொழிலாளர்கள் திரளானோர் பங் கேற்றனர்.