districts

இன்று பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர், ஜூலை 7-

     பொது விநியோகத் திட்டத்தில், ஏதேனும் குறைபாடுகள் இருப்பின்  அதனைக் களைவதற் கும், மக்களின் குறை களைக் கேட்டு அவற்றை  உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும், ஒவ் வொரு மாதமும் தஞ்சா வூர் மாவட்டத்தில் உள்ள  அனைத்து வட்டங்களி லும், பொது விநியோகத் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்திட சென்னை, உணவுப்பொ ருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

     அதன்படி 2023 ஜூலை மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்,  ஜூலை 8 (சனிக் கிழமை) காலை 10 மணி  முதல் பிற்பகல் 1 மணி  வரை, தஞ்சாவூர் மாவட்டத் தில் உள்ள 9 வட்டங்களி லும் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.

     எனவே, பொதுமக்க ளுக்கு பொதுவிநி யோகத் திட்டம் தொடர் பான குறைகள் ஏதும்  இருப்பின், தொடர்பு டைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித் துள்ளார்.

;