திருச்சிராப்பள்ளி, செப்.6 - தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு கடந்த 1.7.2022 ஆம் தேதி முதல் 3 சதவீத அகவிலைப் படியினை உயர்த்தி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், மின்வாரிய ஊழியர்களுக்கு இதுவரையிலும் அகவிலைப்படி வழங்கப்படவில்லை. தமிழக அரசு போட்டுள்ள உத்தரவில் நலிவடைந்த நிறுவனங்களில் பொதுத்துறை நிறுவ னங்கள் இருந்தாலும் அரசின் சலுகை கள் கிடையாது என ஆணை பிறப்பித் துள்ளதால், அகவிலைப்படி உள்ளிட்ட அனைத்து பணப் பயன்கள் பெறு வதற்கு தடையாக உள்ள அரசா ணையை ரத்து செய்ய வேண்டும். 3 சதவீத அகவிலைப்படியினை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வா ரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திங்களன்று மாலை தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சங்க செயலாளர்கள் ஏடிபி அருள், இன்ஜினியர் சங்க நரசிம்மன், பொறியாளர் கழக விக்ரமன், ஐக்கிய சங்க ராஜமாணிக்கம், பெடரேசன் சிவ செல்வம், சம்மேளன பெருமாள் ஆகி யோர் பேசினர். தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு எஸ்.கே.செல்வராஜ் நன்றி கூறினார்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலக வாயி லில் அனைத்து சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலா ளர் சம்மேளனம்(ஏஐடியுசி) செயலாளர் பொன்.தங்கவேலு தலைமை வகித்தார். மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயலாளர் எஸ்.ராஜாராமன், பொறியாளர் சங்க மாநில நிர்வாகி சுந்தர்ராஜ், பொறியாளர் கழக செயலாளர் மகாலிங்கம், ஐக்கிய சங்கம் செயலாளர் ராகவன், அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பஞ்சு ராஜேந்தி ரன், எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் மோகன்தாஸ் ஆகியோர் விளக்க உரையாற்றினர்.