திருச்சிராப்பள்ளி, ஜூலை 3-
2007 இல் மூடப்பட்ட ராம்ஜிநகர் உமா பரமேஸ்வரி மில் தொழிலாளர்களின் ஆலோசனை கூட்டம் ராம்ஜி நகர் சமுதாய கூடத்தில் சங்க செயலாளர் சங்கர் தலைமை யில் நடந்தது.
சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், பஞ்சாலை தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலா ளர் எம்.அசோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பஞ்சாலையில் வேலை செய்த 820 தொழிலா ளர்களுக்கு வழங்க வேண்டிய கிராஜூவிட்டி, பி.எப் மற்றும் இதர செட்டில்மெண்ட் தொகை இதுவரை வழங்கப் படாமல் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இது சம்பந்த மாக கடந்த மாதம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப் பட்டது. அதிலும் தீர்வு கிடைக்காததால், தமிழக அரசு இதில் தலையிட வேண்டும்.
இதனை வலியுறுத்தி ஜூலை 26 அன்று, ராம்ஜி நகரில் மூடப்பட்ட பஞ்சாலை முன்பிருந்து தொழிலாளர் குடும்பத் துடன் ஊர்வலமாக சென்று, ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ அலுவல கத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டது.