திருவாரூர், ஜூலை 12 -
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நான்காண்டு ஒருங்கி ணைந்த ஆசிரியர் கல்விப் படிப்பு (Integrated Teacher Education Programme, ITEP) 2023-2024 ஆண்டு முதல் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இது புதுதில்லியில் இயங்கி வரும் தேசிய ஆசிரியர் கல்விக் குழு மத்தால் (National Council of Teacher Education, NCTE) அங்கீ கரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு மருத்துவர்களுக்கு எம்பிபிஎஸ், பொறி யாளர்களுக்கு பி.இ. படிப்பு உள்ளதோ, அதே போன்று ஆசிரியராக முனைவோருக்கு ஐடிஇபி (ITEP) படிப்பு உள்ளது.
பி.எஸ்சி. மற்றும் பி.எட் தனித்தனியே படிக்கும் போது ஐந்தாண்டு கள் ஆகிறது. ஆனால் ஐடிஇபியில் பி.எஸ்.சி, பி.எட் படிப்பிற்கான காலம் நான்காண்டுகள். இந்த படிப்பிற்கான சேர்க்கை புதுதில்லியில் உள்ள தேசிய தேர்வாய்வு முகமையின் (National Testing Agency, NTA) கீழ் இயங்கும் தேசிய பொது நுழைவுத் தேர்வின் (National Common Entrance Test, NCET) அடிப்படையில் நடைபெறும்.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த பி.எஸ்சி., பி.எட். (Integrated B.Sc., B.Ed.) படிப்பிற்கு ஏற்கனவே விண்ணப்பித்திருப்பவர்கள் 19.7.2023 அன்றுக்குள் https://ncet.samarth.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆசிரியராக ஆர்வமுள்ளவர்களும் விண்ணப் பிக்கலாம். பி.எஸ்.சி., பி.எட் படிப்பிற்கான தகுதி அளவுகோல்களை தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக இணையதளமான CUET_UG_2023_Eligibility_criteria_10022023.pdf (cutn.ac.in) மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இப்படிப்பு பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களை https://ncet.samarth.ac.in மற்றும் www.cutn.ac.in ஆகிய இணைய தளங்களில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம் என மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.