மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற டேனிஷ் கோட்டை ரூ.4.35 கோடி மதிப்பீட்டிலும், டேனிஷ் கவர்னர் மாளிகை ரூ.3.63 கோடி மதிப்பீட்டிலும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதனை சமூக நலத்துறை ஆணையரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான வே.அமுதவல்லி, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.