திருநெல்வேலி, டிச.17- நெல்லை டவுண் சாப்டர் பள்ளி சுவர் வெள்ளியன்றுஇடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் பலியானார்கள். மூன்று மாணவர்கள் படுகாயமடைந்தனர். மேலும், பல மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஸ்ரீராம், மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி பாஸ்க ரன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் மோகன், பெருமாள், பாளையங் கோட்டை செயலாளர் துரை, மேலப்பா ளையம் செயலாளர் குழந்தைவேலு, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.முரு கன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் காசிவிஸ்வநா தன், பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாவட்டச் செயலாளர் சங்கரபாண்டி யன் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெறும் மாணவர்களை சந்தித்தனர். நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்திருந்த மாவட்ட ஆட்சித்தலைவரையும் சந்தித்து பேசி னர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே. ஸ்ரீராம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.காசிவிஸ்வ நாதன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சி ஸ்ட் லெனினிஸ்ட் ) கட்சி மாவட்டச் செய லாளர் சங்கரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நெல்லை சாப்டர் மேல்நிலைப்பள்ளி கழிவறைச் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் பலியாகி இருப்ப தும், மூன்று மாணவர்கள் படுகாய மடைந்திருப்பதும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. பலியான மாணவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறோம். இரண்டாயி ரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயி லும், பாரம்பரியமிக்க பள்ளியின் கட்டி டங்கள் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது.
தொடர் மழையின் காரணமாக பழமையான கட்டிடங்கள் பழுதடைந்திருக்கும் என்கிற கவனமும் அக்கறையும் இல்லாத, அலட்சியப் போக்கால் இச்சம்பவம் நடந்திருக்கிறது. உடனடியாக அனைத்து தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டி டங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். உயிரிழந்த மாண வர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி நஷ்ட ஈடும், படுகாயமடைந்த மாண வர்களுக்கு 50 லட்சம் நஷ்ட ஈடும் தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். பள்ளி கட்டிடம் இடிந்து பலியான 6 ஆம் மாணவர் சுதீஷ் பாப்பாக்குடி யூனி யன் பழவூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ராமச்சந்திரன். தாய் முத்துமாலை. நெல்லை டவுனில் ராமச்சந்திரன் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். தாய் முத்துமாலை 100 நாள் வேலை திட்டத்தில் பணி புரிந்து வரு கிறார். இவர்களுக்கு நெல்லை டவுன் கல்லணை பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் சிவஜோதி (15) என்ற மகளும், நெல்லை டவுன் சாப்டர் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வரும் வெங்க டேஷ் (13) என்ற மகனும் உள்ளனர். இவர்களின் 3 ஆவது குழந்தை தான் இறந்து போன சுதீஷ் என்பது குறிப்பிடத் தக்கது.