தஞ்சாவூர், ஜூலை 9-
தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் 1994-1998 ஆம் ஆண்டு பயின்ற பொறியி யல் மாணவர்களின் சந்திப்பு பல்நோக்கு உள்விளை யாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பேரா.த.கவிதா வரவேற்றார். பல்கலைக்கழக துணை வேந்தர் பேரா. செ.வேலுசாமி, பதிவாளர் பேரா பி.கே.ஸ்ரீவித்யா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் துணைவேந்தர் பேரா. நல்.இராமச்சந்திரன் உருவப்படத்தை, பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீர மணி திறந்து வைத்து உரையாற்றினார். முன்னாள் மாண வர்கள் சங்கம் சார்பாக ரூ.2 லட்சத்துக்கான காசோலை வேந்தர் டாக்டர் கி.வீரமணியிடம் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவி பூங்கொடி நன்றி கூறினார்.