districts

குடிசை வீடு எரிந்து சாம்பல்

சீர்காழி, மார்ச் 28 - மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வேட்டங்குடி ஊராட்சி வெள்ள குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயத் தொழிலாளி ரகுபதி(35). மரம் அறுக்கும் இயந்திரங்களை பழுது நீக்கம் செய்பவர். இவர் ஞாயிறன்று வீட்டிற்கு அருகில் உள்ள பகுதியில் குப்பை எரிந்து கொண்டிருந்த போது, வீசிய காற்றினால் தீப்பொறி பறந்து வந்து குடிசை வீட்டின் மேல்பட்டு தீப்பி டித்து எரிய ஆரம்பித்தது. தகவலறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்த னர். இந்த தீ விபத்தில் வீட்டிற்குள் பழுது நீக்குவதற்காக விவசாயிகளிட மிருந்து வாங்கி வைத்திருந்த ஏழுமரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் டிவி,  பேன், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்க ளும் எரிந்து சாம்பலாயின.  இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்  பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் வீட்டை இழந்த ரகுபதி யின் மனைவி மாதவியிடம், சீர்காழி தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நிவாரண உதவி வழங்கினர்.