districts

img

மாணவர் சங்கத்தினரை இழிவுபடுத்திய கல்லூரி முதல்வர் மாணவர்கள் கொந்தளிப்பு

மயிலாடுதுறை, அக்.13-  மயிலாடுதுறை மாவட்  டம் குத்தாலம் அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரி யில் அடிப்படை வசதிகளை செய்துத்தரக்கோரி போராடி வரும் இந்திய மாணவர் சங்  கத்தினரையும், மாணவர் களையும் கேவலமாகவும், கொச்சைப்படுத்தியும், மிரட்  டிய கல்லூரி முதல்வரை கண்டித்து குத்தாலம் கடை வீதியில் இந்திய மாணவர்  சங்கம் மற்றும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழனன்று வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஐயப்பன்  தலைமையில் நடைபெற்றது.  மாணவர் சங்க மாநிலத்  தலைவர் கோ.அரவிந்தசாமி, வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.அறிவழகன், மாண வர் சங்க மாவட்டச் செயலா ளர் அமுல்காஸ்ட்ரோ மற் றும் இரு சங்கங்களின் நிர்  வாகிகள் கண்டன உரை யாற்றினர்.  குத்தாலம் மாதிரிமங்க லத்தில் கடந்த அதிமுக ஆட்சி யில் துவங்கப்பட்ட அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரி யில் 600 க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகள் பயி லும் சூழலில், சமுதாயக்கூட கட்டிடத்திலேயே கல்லூரி இயங்கி வருகிறது. மேலும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் என அனைவ ருக்கும் ஒரே ஒரு கழிப்பறை  என அடிப்படை வசதிகள் எது வும் இல்லாமலேயே கல்லூரி செயல்பட்டு வருகிறது.  எல்லா வசதிகளுடன் கூடிய கட்டிடத்தில் கல்லூரி யை மாற்றக் கோரியும், சொந்தக் கட்டிடத்தை கட்டக் கோரியும் பல போராட்டங் களை தொடர்ச்சியாக மாண வர் சங்கத்தினர் மாணவர் களுடன் போராடி வருகின்ற னர்.  இந்நிலையில், கடந்த வாரமும் வகுப்புகளை புறக்  கணித்து மாணவர்கள் கல்லூரி செயல்படும் சமுதா யக்கூடம் முன்பே அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

இதையடுத்து கல்லூரி யின் முதல்வர் விஜயேந்தி ரன் சுற்றறிக்கை போன்ற கடி தத்தை வெளியிட்டதோடு அதை சமூக வலைத்தளத்தி லும் பதிவிட்டுள்ளார். 3 பேர் இடைநீக்கம் அக்கடிதத்தில் ஜன நாயக முறையில் போராடிய மாணவர்களை தீய சக்தி கள் என்றும், நாய்கள் என் றும், “இனிமேல் தான் என்  ஆட்டம் ஆரம்பம்” என்றும்  ரவுடியை போல் மிரட்டியுள்  ளார். மேலும் மூன்று மாண வர்களை கல்லூரியிலிருந்து இடைநீக்கமும் செய்திருக்கி றார்.  மேலும் தொடர்ந்து மாண வர்களை கடுமையான வார்த்தைகளை பயன் படுத்தி கொச்சையாகவும் பேசி வருகிறார். இந்த அடா வடியான போக்கை கண்  டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், ஏராளமா னோர் கலந்துக்கொண்டு கல்லூரி முதல்வருக்கு எதி ராக முழக்கமிட்டனர்.  போராட்டத்தில், ஜன நாயக முறையில் போராடிய மாணவர் சங்கத்தினரையும், உரிமைகளை கேட்ட மாண வர்களை மிரட்டியும் வரும் குத்தாலம் கல்லூரி முதல்வர் மீது துறை ரீதியான உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும், கல்லூரியில் அடிப்படை வசதிகளை உட னடியாக செய்துத்தர வேண் டும் என முழக்கமிட்டனர்.

;