தஞ்சாவூர், ஜூலை 6-
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஓய்வூதி யர் குறைதீர் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர் (வருவாய்) என்.ஓ.சுகபுத்ரா தலைமை வகித்தார். அரசு கூடுதல் செயலர், நிதித்துறை, ஓய்வூதிய இயக்கக இயக்குநர் து.ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (கணக்குகள்) ஆர்.பிரேமலதா மாவட்ட கருவூல அலுவலர் கோ.கணேஷ்குமார், முதுநிலை கண்காணிப்பா ளர் ம.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், ஓய்வூதியர்களின் ஊதிய நிலுவை, ஊதிய நிர்ணயம், விடுப்பூதியம், திருந்திய ஓய்வூதியம், சேமநல நிதி, குடும்ப பாதுகாப்பு நிதி, மருத்துவக் காப்பீடு வழங்கக் கோருதல் தொடர்பான 47 மனுக்கள் பெறப் பட்டன. அவற்றுள் பெரும்பான்மை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. நிலுவையில் உள்ள மனுக்கள் விரைவில் தீர்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.