தஞ்சாவூர், டிச.22 - தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை தமிழ்ப் பல்கலைக்கழக அலுவல் நிலைப் பணியாளர் சங்கம், தஞ்சாவூர் மீனாட்சி மருத்து வமனை நிர்வாகம் இணைந்து மருத்துவ முகாம் நடத்தினர். இம்முகாமிற்கு, பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். அப்போது துணைவேந்தர் பேசுகையில், “தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு முக்கியமான பங்களிப்பு, குறிப்பாக கற்பித்தலின் ஆய்வுப் பணிகளை தரமாக மேம்படுத்தும் வகையில், ஆய்வுத் தலைப்புகளும் அதற்கான வழிகாட்டு நெறி முறைகளும் அமைக்கப்படும். மேலும், கிராமப்புற ஏழை-எளிய மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை இல்லந்தோறும் எடுத்துச் செல்லும் இவ்வேளையில், தமிழ் வழிக்கல்வியை மேம்படுத்தும் வகையில் தொலைநிலைக் கல்வியை தொடர்ந்து நடத்த செய்வது தமிழ்ப் பல்கலைக்கழ கத்தின் நோக்கமாக இருக்கும். தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் தேசிய அளவிலும், உலக அளவிலும் கொண்டு செல்ல வும், தமிழ் வளர் மையத்தின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சி கள் வாயிலாகவும், பல்வேறு துறைகளின் ஆய்வின் மூல மாகவும் திட்டங்களை தமிழ்ப் பல்கலைக்கழகம் மேற் கொள்ளும்” என்றார். முன்னதாக, இம்முகாமை திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர் டி.கே.ஜி நீலமேகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.