districts

தையல் இயந்திரங்கள் வழங்கல்

புதுக்கோட்டை, ஏப்.18-

   புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறை தீர் நாள் கூட்டம் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடை பெற்றது. பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 361 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனர். அவற்றின் மீது தகுந்த  நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர் களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

   மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், கை-கால் பாதிக்கப்பட்ட, செவித்திறன் குறைபாடுடையவர்கள் மற்றும் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்கள்  என மொத்தம் 30 பயனாளிகளுக்கு ரூ.2,40,000 மதிப்புடைய மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்களையும் ஆட்சியர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, ஊரக  வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட  வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் செ.உலகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.