பள்ளிபாளையம், மே 22-
நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொ ழிலாளர்களின் தொடர் போராட்டம் விளைவாக 10 சதவிகிதம் கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் சுற்றுவட்டார பகுதி களில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில் நேரடியா கவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த விசைத்தறி தொழிலாளர் களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய கூலி உயர்வு வழங்கப் படும். இந்நிலையில் 26 மாதங்கள் கடந்த நிலையில், புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதைய டுத்து, விசைத்தறி தொழிற்சங்கத்தினர் 75 சதவிகித கூலிஉயர்வு உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பள்ளிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் விசைத்தறி தொழிற்சங்கங்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்களுடன் கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதில், ஆறு சுற்று பேச்சுவார்த்தை கடந்த நிலை யில், எவ்வித ஒப்பந்தமும் ஏற்பட வில்லை. இதையடுத்து, மே 22ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என சிஐடியு அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஞாயிறன்று பள்ளி பாளையம் காவல் ஆய்வாளர் சந்திர குமார் தலைமையில், விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிற்சங்கங்களான சிஐடியு, ஏஐடியுசி, ஏஐசிசிடியு நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொழிற்சங்க நிர்வாகிகள், தற் போதைய பொருளாதார நிலைக்கு ஏற்ப விசைத்தறி தொழிலாளர்களின் வருவாய் இல்லை.
இதனால் தொழி லாளர்கள் வறுமைக்கு தள்ளப்பட்டுள் ளனர். இதை கருத்தில் கொண்டு கூலி உயர்வு வழங்குவது மிகவும் அவ சியமான ஒன்று என வலியுறுத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. பேச்சு வார்த்தையின் நிறைவாக, பள்ளிபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து பிரிவு விசைத்தறி தொழி லாளர்களுக்கும் 10 சதவிகித கூலி உயர்வு வழங்குவதென முடி வானது.
இதன் அடிப்படையில் 1.6.2023 முதல் 31.5.2024 வரை ஏழு சதம் கூலி உயர்வும், 1.6.2024 முதல் 1.6.2025 வரை மூன்று சதவிகிதம் சேர்த்து 10 சதவிகித கூலி தருவது எனபேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இந்த ஒப்பந்தமானது இரண்டு ஆண்டு களுக்கு அமலில் இருக்குமென என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விசைத்தறி தொழிற்சங்கம் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டனர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு களுக்கு மேலாக விசைத்தறி தொழி லாளர்களின் ஒன்றுபட்ட போராட் டத்தின் மூலமாக கூலி உயர்வு ஏற் பட்டுள்ளது.
இந்த புதிய கூலி ஒப்பந் தத்தின் காரணமாக விசைத்தறி தொழிலாளி மாதத்திற்கு சராசரியாக ரூ.1200 முதல் ரூ.1500 வரை கூடுதல் வருவாய் பெறுவார்கள் என சிஐடியு தலைவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சிஐடியு சார்பில் அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்த போராட்டம் விலக்கி கொள்ளப் பட்டது.