districts

img

திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆய்வு

திருவாரூர், டிச.16 - திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு  ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  செய்தியாளர்களிடம் கூறுகையில், திருவா ரூர் மாவட்டத்தில், ஓர் மைய நூலகம், 35 கிளை நூலகங்கள், 50 ஊர்புற நூலகங்கள், 8  பகுதி நேர நூலகங்கள் என மொத்தம் 94 நூல கங்கள் இயங்கி வருகின்றன. மாவட்ட மைய  நூலகத்தில் கிட்டத்தட்ட 1 லட்சத்து 29 ஆயி ரத்து 743 புத்தகங்கள் உள்ளன. 16,043 நபர்கள்  உறுப்பினர்களாக உள்ளனர். இந்நூலகத் திற்கு தேவையான அனைத்து வசதிகளை யும் ஏற்படுத்தித் தர நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான  புகார்களை தெரிவிக்கும் விதமாக 14417  மற்றும் 1098 என்ற எண்ணினை தொடர்பு  கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது என்றார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரிகிருஷ்ணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட நூலக அலுவலர் ஆண்டாள் உள்ளி ட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

;