அறந்தாங்கி, செப்.27 - ஒரு லட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு, ஒரே நாளில் ஒரு கோடி பனைவிதை நடும் நிகழ்ச்சி அக்டோ பர் 1 ஆம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற உள்ளது. இதற்காக, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ராணியம் மாள் பவுண்டேசன் இணைந்து பனை விதைகளை சேகரித்தன. இதில் பச்சலூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரி யர் வீ.ஜோதிமணி, அறந்தாங்கி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் செ.குமார், உடற்கல்வி இயக்குனர் சிவக் குமார், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் குமரேசன், ராணியம்மாள் பவுண்டேசன் நிறுவனர் பொறியாளர் லயன்.சர்வம் சரவணன், மற்றும் பேராசிரியர்கள், மாண வர்கள் ஒன்றிணைந்து பனை விதை வங்கியை திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் செ.குமார் சிறப்பு ரையாற்றினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை ஒருங்கிணைக்கும் பணியை கிரீன் நீடா அமைப்பின் நிறுவனர் மு.ராஜவேலு, தமிழ்நாடு தன்னார்வ லர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர் தன்னம்பிக்கை பேச்சாளர் ஹரிகிருஷ்ணன், புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டனர்.