சின்னாளப்பட்டி, ஆக.6-
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தும் விதமாக மாணவர் நாடாளுமன்றம் அமைக் கப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 5 சனிக்கிழமை பள்ளியில் மாணவர் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற் றது. மாணவ மாணவிகள் வாக்களித்தனர். 20 மாண வர்களும் 14 மாணவிகளும் இப்போட்டியில் கலந்து கொண்டனர். மூன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு இத் தேர்தல் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற வர்கள் வரும் சுதந்திர தினத்தன்று பதவி ஏற்பார்கள் என்று பள்ளி முதல்வர் திலகம் தெரிவித்தார் இந் நிகழ்ச்சியில் நிர் வாக அறங்காவலர் - தாளாளருமான சிவக்குமார், மேலாளர் பாரதிராஜா உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.