ஒருவர் கைது
தஞ்சாவூர், மே 10-
தஞ்சாவூர் நகரம், வல்லம், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை காவல் சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கடைகள், வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த புல்லட் மோட்டார் சைக்கிள்களில் அவ்வப்போது திருட்டு போனது. இது தொடர்பாக புல்லட்டின் உரிமையாளர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.
விலை உயர்த்த புல்லட்டை குறிவைத்து திருடும் கும்பலை கைது செய்ய சிறப்பு தனிப்படை அமைக்கப் பட்டது. தனிப்படையினர் திருட்டு நடந்த பகுதிகளில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும், குறைந்த விலையில் புல்லட் மோட்டார் சைக்கிள் விற்பனை செய்வது குறித்தும் விசாரித்து வந்தனர்.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திரு டப்பட்ட புல்லட் மோட்டார் சைக்கிளை ஒரு இளைஞரிடம் குறைந்த விலைக்கு விற்க முயலும் போது ஒருவர் பிடி பட்டார். பின்னர் அவரை காவல்துறையினர் விசாரித்த போது, தஞ்சாவூர் பூக்கார முதல்தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் அரவிந்த் (30) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது, தஞ்சாவூர் பகுதியில் புல்லட் மோட்டார் சைக்கிள்களை மட்டும் நான்கு பேர் சேர்ந்து திருடுவதாகவும், அதில் உள்ள பதிவு எண்களை மாற்றி, குறைந்த விலைக்கு தஞ்சாவூர் பகுதி யிலேயே விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி குறைந்த விலைக்கு விற்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான 20 புல்லட் மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த புல்லட் மோட்டார் சைக்கிள் திருட்டில் தொடர்புடைய காச வளநாடு புதூரைச் சேர்ந்த அர்ஜூன், அரவிந்த், தஞ்சா வூர் கீழவாசலைச் சர்ந்த அலெக்ஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.