districts

img

மாநில அளவில் சிறுவர்களுக்கு சதுரங்கப் போட்டி

பாபநாசம், ஜன.29 - தஞ்சாவூர் மாவட்டம், பாப நாசத்தை அடுத்த கபிஸ்தலம் ஆர்.எஸ். மஹாலில் 11 ஆம் ஆண்டு சிவஞான முதலியார் நினைவு, பாபநாசம் ரோட்டரி  சங்கம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட சது ரங்க கழகம் இணைந்து நடத்திய மாநில  அளவிலான சிறுவர்களுக்கான சது ரங்கப் போட்டி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க கழக  துணைத் தலைவர் சரவணன் தலைமை  வகித்தார். ரோட்டரி உதவி ஆளுநர் வெங்கடேசன், மாவட்டத் தலைவர் செந்தில்குமரன், துணைச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், துணைத் தலை வர்கள் செந்தில்நாதன், சீனிவாசன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்ட ரோட்ராக்ட் குழுத் தலைவர்  திருப்பதி போட்டியை துவக்கி வைத்து  பேசினார். போட்டியில் வெற்றி பெற்றவர் களுக்கு மாவட்ட நிர்வாக செயலாளர் செந்தில்குமார், கபிஸ்தலம் ஆர்.எஸ்.மஹால் உரிமையாளர் இளங்கோவன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். இதில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களைச் சேர்ந்த சிறுவர்கள் பங்கேற்ற னர். 9,11,13,17 வயதுக்கு உள்பட்ட பிரிவு களில் சதுரங்க போட்டிகள் நடைபெற்றன.  முன்னதாக பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவர் செல்வகுமார் வர வேற்றார். மாவட்ட சதுரங்கக் கழக செய லாளர் தர்ம.சிலம்பரசன் நன்றி கூறினார்.